முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மே 21

0

முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மே 21

  • கேரள குருவாயூரில் 12 வது நூற்றாண்டு கவிஞர் ஜெயதேவா எழுதிய “கீதா கோவிந்தம்” பண்டைய நடன நாடக “அஷ்டபடியாட்டத்தின் ” மறுமலர்ச்சி விழாவை இந்திய துணைத் ஜனாதிபதி திரு. வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்
  • நிப்பா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த கேரள அரசுக்கு அனைத்து ஆதரவையும் தருவதாக ஸ்ரீ ஜீ பி நட்டா உறுதிப்படுதியுள்ளார்.
  • புலிகளின் கணக்கெடுப்பின்போது பாரம்பரியமாக செய்து வரும் கால்தடங்களின் அறிகுறிகள் மற்றும் பிற அறிகுறிகளின் கணக்கெடுப்பில் மனித பிழைகளைத் தவிர்க்க புலிகள் – தீவிர பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைமை (எம்-ஸ்ட்ரைப்ஸ்) என்று ஒரு புதிய பயன்பாட்டை முதன் முறையாக  அதிகாரிகள் பயன்படுத்தினர்.
  • சத்ரபதி சிவாஜி மஹாராஜ் டெர்மினஸ் (முந்தைய விக்டோரியா டெர்மினஸ்) 2018 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதி அதன் 130 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
  • ஆஸ்திரேலியாவின் ஒரு விஞ்ஞானக் குழுவானது, சமீபத்தில், பெரும்பிஸ் என்னும் காட்டு குதிரை 20 க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் மற்றும் ஏழு விலங்கு இனங்கள், மூன்று தவளை இனங்களின் அழிவிற்கு காரணமாக உள்ளது என கண்டுபிடித்துள்ளனர்.எனினும் அதை அளிக்காமல் அந்த இனத்தை பாதுகாக்க முடிவு எடுத்துள்ளனர்.
  • அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி (ADNOC) யிலிருந்து , முதல் முறையாக இந்தியாவின் மங்களூர் ஸ்டெடெஜிக் பெட்ரோல் ரிசர்விற்கு   கச்சா எண்ணெய் வந்தடைந்தது .
  • பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர், மே 21, 2018 அன்று ரஷ்ய கூட்டமைப்பில் உள்ள சோச்சி நகரில் முதல் முறைசாரா உச்சி மாநாட்டை நடத்தினர்.
  • ஜெனீவாவில் 71 ஆவது உலகளாவிய சுகாதார சபை கூட்டத்தில் பொதுநல சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜீ.பி . நட்டா, உரையாற்றினார்.
  • குற்றவியல் சட்டத்தில் பாலின நீதி” பற்றிய தேசிய மாநாட்டின் தொடக்க அமர்வை போலீஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் (பி.பீ.ஆர் & டி) ஏற்பாடு செய்துள்ளது.
  • நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த இந்திய ராணுவத்திற்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் தொழில்நுட்பங்களின் அடிப்படையில் ஆயுதங்களை உருவாக்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
  • இந்திய கடற்படை கப்பல் வெசல் தரினி (INSV தரினி) கோவா துறைமுகத்திற்குள் நுழைந்து , 21 மே 2018 அன்று வரலாற்று உலகளாவிய சுற்றுப்பயணத்தை முடித்தது.
  • சூப்பர்சோனிக் க்ரூஸ் பிரம்மோஸ் ஏவுகணை ஓடிஷா கடற்கரையோரத்தில் நடத்திய சோதனையில் புதிய அம்சங்களை வெற்றிகரமாக பரிசோதித்தது.
  • லியோனல் மெஸ்ஸி ஐந்தாவது முறையாக ஐரோப்பிய கோல்டன் ஷூ விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.
  • நிக்கோலஸ் மதுரோ வெனிசுலா ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார் .
  • ரபேல் நடால் இத்தாலிய ஓபன் டென்னிஸ் போட்டிஆடவர் ஒற்றையர் பிரிவில் எட்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.
  • கொரியாவில் டைபெற்று வந்த ஆசிய கோப்பை பெண்கள் ஹாக்கியில் இந்தியாவை வீழ்த்தி தென்கொரியா சாம்பியன் பட்டம் வென்றது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!