கனமழையால் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!

0
கனமழையால் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு அறிவிப்பு!
கனமழையால் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு அறிவிப்பு!
கனமழையால் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!

அஸ்ஸாமில் கூடுதல் கனமழையின் காரணமாக அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து சாலைகள், வீடுகள் என அனைத்தும் பாதிப்படைந்துள்ளது. இதனால் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு நாளை வரைக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை எதிரொலி:

அனைத்து மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக அதிகமான மழைப்பொழிவு இருந்து வருகிறது. அதிலும் அஸ்ஸாமில் மிக அதிகமான கனமழை இருந்து வருகிறது. கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆறுகளின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக கச்சார் மாவட்டத்தில் மட்டுமே 1.19 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். இந்த கனமழையின் காரணமாக ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் அசாமின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது.

இந்தியாவில் செப்டம்பர் முதல் 5ஜி சேவை – 1.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு!

அஸ்ஸாமில் உள்ள 6,911 குழந்தைகள், 50 கர்ப்பிணிப் பெண்கள், பாதிக்கப்பட்ட மக்கள் என மொத்தமாக 135 நிவாரண முகாம்கள் மற்றும் 113 விநியோக மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். வெள்ளத்தினால் அஸ்ஸாமில் உள்ள அனைத்து பாலங்கள் மற்றும் சாலைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. கூடுதல் மழையினால் தகவல் தொடர்பு நிறுவனங்களும் பாதிப்படைந்துள்ளது. காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயம் (KNPTR), மாநிலத்தில் உள்ள பிற தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் முழுவதும் வெள்ளப்பெருக்கினால் பதிப்படைந்துள்ளது. இந்த விலங்குகளுக்கு தங்குமிடம் வழங்குவதற்காக அஸ்ஸாம் வனத்துறையால் 40 க்கும் மேற்பட்ட மேட்டு நிலங்கள் கட்டப்பட்டுள்ளன.

Exams Daily Mobile App Download

அசாம் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து கல்வி மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தையும் இன்று மற்றும் நாளை மூட உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. நாளை இரவு வரைக்கும் இந்த உத்தரவு அமலில் இருக்கும். இதற்குப் பிறகும் கூடுதல் மழைப்பொழிவு இருக்குமானால் அதற்கான அறிவிப்பும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here