மே 2 நடப்பு நிகழ்வுகள்

0

மே 2 நடப்பு நிகழ்வுகள்

மாநிலம்

தமிழகம்:

வங்கி பரிவர்த்தனைகள் குறித்து விழிப்புணர்வு:

  • வங்கி மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் கடன் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாதம்தோறும் குறைந்தபட்சம் 2 சிறப்பு முகாம்களை நடத்துமாறு வங்கிகளை மத்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

தெற்கு ரயில்வேயில் இருக்கும் 8 ரயில்வே பள்ளிகளை மூட உத்தரவு:

  • ரயில்வே துறையில், மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்ட விவேக் தேப்ராய் தலைமையிலான கமிட்டி, ரயில்வே துறையின் நிர்வாகத்தில் இருந்து பள்ளி மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தைத் தனியாக பிரிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு பரிந்துரைகளை அளித்தது.

ரூ.2,500 கோடியில் சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம்:

Chennai airport
By User:Tshrinivasan [CC BY-SA 3.0 (https://creativecommons.org/licenses/by-sa/3.0)], from Wikimedia Commons
  • சென்னை, கவுகாத்தி, லக்னோ உள்ள விமான நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த புதிதாக முனையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. லக்னோ விமான நிலையம் 2030-31 ஆம் ஆண்டுக்குள்ளான வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு விரிவாக்கம் செய்யப்படுகிறது.

மகாராஷ்டிரா:

மராட்டிய தின கொண்டாட்டம்:

  • மராட்டிய தினம் ஆண்டுதோறும் மே 1-ந்தேதி கொண்டாடப்பட்டது. நேற்று மராட்டிய தினத்தையொட்டி மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் அரசு சார்பில் விழா நடந்தது.

மும்பை அரபிக்கடலில் அமையும் சத்ரபதி சிவாஜி சிலை:

  • சத்ரபதி சிவாஜி சிலையின் உயரம் மேலும் 2 மீட்டர் அதிகரிப்பு. மும்பை மெரின் டிரைவ் கடற்கரையில் இருந்து சுமார் 1½ கி.மீ. உள்ளே அரபிக்கடலில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜிக்கு பிரமாண்டமான நினைவிடம் அமைக்கப்படுகிறது.
  • உலகிலேயே உயரமான சிலை என்ற பெருமையை அடைய சிவாஜி சிலையின் உயரத்தை 212 மீட்டராக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தேசியசெய்திகள்:

உலக அளவில் ஃபேஸ்புக் புகழில் பிரதமர் மோடிக்கு முதலிடம்:

  • இதில் ஃபேஸ்புக்கில் உலக அளவில் அதிக அளவு பின்தொடரப்படும், புகழ்பெற்ற தலைவராக, பிரதமர் மோடி திகழ்கிறார். ட்விட்டரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலிடத்திலும், அடுத்த இடத்தில் பிரதமர் மோடியும் உள்ளனர்.

உலகில் மிகவும் மாசு அடைந்த 20 நகரங்கள் பட்டியலில் டெல்லி, வாரணாசி உள்ளிட்ட 14 இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளது.

  • உலக அளவில் நகரங்களின் சுற்றுச்சூழல் மாசு தொடர்பாக உலக சுகாதார அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், மனிதர்களுக்கு பெரும் பாதிப்புகளை தரவல்ல பிஎம்5 அளவிற்கு அதிகமாக காற்று மாசு உள்ளதன் அடிப்படையில் டெல்லி, வாரணாசி, கான்பூர், பைசாபாத், கயா, பாட்னா, ஆக்ரா, முசாபர்பூர், ஸ்ரீநகர், குர்கான், ஜெய்ப்பூர், பாட்டியாலா, ஜோத்பூர் ஆகிய நகரங்கள் இந்த பட்டியலில் உள்ளன.

மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டம் .

  • மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாள் விழா அடுத்த ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய அளவிலான 114 பேர் குழு ஒன்று அமைக்கப்பட்டு அந்த குழு பரிந்துரைக்கும் திட்டங்களை மத்திய அரசு பரிசீலித்து நிறைவேற்றும். அந்த குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் குடியரசு தலைவர் தலைமையில் நடைபெற்றது.

சர்வதேச செய்திகள்

அமெரிக்க ராணுவத்தில் விண்வெளிப்படையை உருவாக்க திட்டம்:

  • அமெரிக்க விமான படையில் தற்போது 5 படைகள் இருக்கிறது. தரைப் படை, விமானப் படை, 2 கடற்படை, ஒரு கடலோரக் காவல்படை ஆகியவை இருக்கிறது. இந்த படைகள் மட்டும் இல்லாமல் இதனுடன் ஆறாவதாக ஸ்பேஸ் போர்ஸ் எனப்படும் விண்வெளி படையை உருவாக்க திட்டம்.

வணிகம்:

விமானங்களில் செல்போன் சேவை:

  • விமான பயணிகளுக்கு செல்போன் சேவை மற்றும் இண்டர்நெட் சேவையை அளிப்பது தொடர்பான பரிந்துரைக்கு தொலைத்தொடர்பு கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது.
  • தொலைத் தொடர்புத் துறையில் மிகவும் உயரிய அமைப்பாகத் திகழும் தொலைத்தொடர்பு கமிஷன், டிராய் பரிந்துரைத்த இன்டர்நெட் டெலிபோன் சர்வீசஸ் சேவைக்கும் அனுமதி அளித்துள்ளது.

விளையாட்டுசெய்திகள்:

ஹாக்கி

ஆடவர் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர்: ஹரேந்திர சிங்

  • இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஹரேந்திர சிங், ஆடவர் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே வேளையில் ஆடவர் அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட சோஜெர்ட் மரிஜென் மகளிர் அணியின் பயிற்சியாளராக மறுநியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தடகளம்

தெற்காசிய தடகளம்:

  • 3-வது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன் ஷிப் போட்டி கொழும்பில் வருகிற 5 மற்றும் 6-ந்தேதி நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த 9 வீரர்- வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!