முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மே 18

0

முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மே 18

  • எச்.ஐ.வி. தொற்று மற்றும் எய்ட்ஸை தடுக்க தடுப்பூசி சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த 1998ஆம் ஆண்டிலிருந்து மே 18 அன்று எய்ட்ஸ் தடுப்பூசி விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • ஸ்ரீநகர், கார்கில் மற்றும் லே பகுதிகளை இணைக்கும் வகையில் 14 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்படும் ஸோஜிலா சுரங்கச்சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆசியாவிலேயே மிக நீண்ட இருதிசை சுரங்கப் பாதையான இது, ரூ.6,800 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.
  • தென்மேற்கு பருவமழை மே 29 ம் தேதி கேரளாவிற்கு அதன் சாதாரண நாளின் தேதிக்கு முன்னதாக, வந்து சேரும் என எதிர்பார்க்கப்படும் என இந்தியாவின் வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
  • ஐமோவிக் என்பது மைகிரைன்ஸ் தடுப்புக்கான கால்சிட்டோனின் மரபணு தொடர்பான பெப்டைட் செயல்பாட்டை தடுப்பதன் மூலம் செயல்படும் மருந்துகள் ஆகும்.
  • ADO ஆடிட்டிவ்ஸ் மற்றும் கொல்கத்தாவிலுள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்  (IISER) தண்ணீரில் ஆர்சனிக் அளவை கண்டுபிடிப்பதற்கும் அதை அகற்றுவதற்கும் ஒரு தீர்வைக் கண்டுபிடித்திருக்கின்றன.
  • இந்தியாவில் நீர் வளங்களை அளவிற்கு அதிகமாக பயன்படுத்துவதால்  நன்னீரின் அளவு மிகவும் குறைந்துள்ளதாக புவியை பூமியை கண்காணித்து நாசாவின் செயற்கைக்கோள் தகவல் தெரிவித்துள்ளது.
  • அஸ்ஸாமின் கவுகாத்தியில் மகாராஷ்டிராவின் கல்யாண் நிலையம் வரையிலான புதிய பார்சல் சரக்கு சேவை தொடங்கப்பட்டுள்ளது.
  • 2017-17 ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாகவும் 2018-19 ல் 7.6 சதவீதமாகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • விஷன் இந்தியா பவுன்டேஷன் உடன் இணைந்து நிதி ஆயோக்  பிரான்ஸ் மற்றும் இந்தியாவுடனான பொருளாதார உறவுகளை ஆழப்படுத்த வென்ச்சர் கேபிடல் சிம்போசியம் 2018 ஐ ஏற்பாடு செய்துள்ளது.
  • இந்திய மற்றும் இந்தோனேசியாவிற்கான கடல்வழி பயிற்சி மற்றும் கல்வி ஆகியவற்றில் ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்ய , இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் இந்தோனேசிய கல்வி நிறுவனங்களுக்கிடையே கடல் சார்ந்த படிப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது .
  • தில்லி அமைச்சரவை ,1000 சிஎன்ஜி யில் இயங்கும் பஸ்களை கொள்முதல் செய்யும்  ஒரு திட்டத்திற்கு  ஒப்புதல் வழங்கியது.
  • தென்னாப்பிரிக்காவில் டர்பனில் 4 வது பிரிக்ஸ் மந்திரி கூட்டம்
  • சன்யாவில் , 2018, மே 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் நடைபெற்ற ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு (SCO) உறுப்பு நாடுகளின் கலாச்சார அமைச்சர்களின் 15 வது கூட்டத்தை  டாக்டர் மகேஷ் சர்மா தலைமை தாங்கினார்.
  • தில்லி உலகிலேயே மிகப்பெரிய நகரமாக மாறும் என ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது.
  • லண்டனில் 17.05.2018 அன்று நடைபெற்ற நிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR) பிரிவில் NMDC லிமிடெட் மதிப்புமிக்க எஸ் அண்ட் பி பிளாட்ஸ் குளோபல் மெட்டல்ஸ் விருது 2018 ஐ பெற்றுள்ளது.
  • கேரளா சுற்றுலாத் துறை முகநூல் பக்கத்தில் அதிக லைக்குகளை பெற்று உள்ளது.
  • நீதிபதி ராமலிங்கம் சுதாகர் மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
  • சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு செயலாளர் யுதிர்வீர் சிங் மாலிக்கிற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) தலைவர் பதவி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
  • சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சிந்தனைக் குழுவான தெற்காசிய ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குனராக இந்திய கல்வி மற்றும் வெளிநாட்டு கொள்கை ஆய்வாளர் சி. ராஜா மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஹிமான்டா பிஸ்வா சர்மா ஆண்டு பொது கூட்டத்தில் பேட்மின்டன் ஆசியா கூட்டமைப்பின் (பிஏசி) துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • ஜினா ஹெஸ்பெல் முதன்முதலாக CIA தலைவரான முதல் பெண்மணி ஆவார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!