நடப்பு நிகழ்வுகள் மே 18

0

நடப்பு நிகழ்வுகள் மே 18

முக்கியமான நாட்கள்

மே 18: உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம்

  • எச்.ஐ.வி. தொற்று மற்றும் எய்ட்ஸை தடுக்க தடுப்பூசி மிக அவசியமான, அவசரத் தேவையாக உள்ளது. இதனை கண்டுபிடிக்க விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் முயன்று வருகின்றனர். இது சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த 1998ஆம் ஆண்டிலிருந்து மே 18 அன்று எய்ட்ஸ் தடுப்பூசி விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.

தேசிய செய்திகள்                                                                                  

ஜம்மு காஷ்மீர்

ஸோஜிலா சுரங்கப் பாதை

  • ஸ்ரீநகர், கார்கில் மற்றும் லே பகுதிகளை இணைக்கும் வகையில் 14 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்படும் சுரங்கச்சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆசியாவிலேயே மிக நீண்ட இருதிசை சுரங்கப் பாதையான இது, ரூ.6,800 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.

கேரளம்

தென்மேற்கு பருவமழை

  • தென்மேற்கு பருவமழை மே 29 ம் தேதி கேரளாவிற்கு அதன் சாதாரண நாளின் தேதிக்கு முன்னதாக, வந்து சேரும் என எதிர்பார்க்கப்படும் என இந்தியாவின் வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

சர்வதேச செய்திகள்

அமெரிக்கா மைகிரைன்ஸ் தடுப்புக்காக புதிய மருந்துகளை அங்கீகரிக்கிறது

  • ஐமோவிக் என்பது மைகிரைன்ஸ் தடுப்புக்கான கால்சிட்டோனின் மரபணு தொடர்பான பெப்டைட் செயல்பாட்டை தடுப்பதன் மூலம் செயல்படும் மருந்துகள் ஆகும்.

அறிவியல் செய்திகள்

தண்ணீரில் ஆர்சனிக் கண்டுபிடித்து அகற்றுவதற்கு புதிய சாதனம்

  • ADO ஆடிட்டிவ்ஸ் மற்றும் கொல்கத்தாவிலுள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்  (IISER) தண்ணீரில் ஆர்சனிக் அளவை கண்டுபிடிப்பதற்கும் அதை அகற்றுவதற்கும் ஒரு தீர்வைக் கண்டுபிடித்திருக்கின்றன.

நாசா செயற்கைக்கோள்கள் இந்தியாவில் நன்னீர் சரிவை வெளிப்படுத்தியுள்ளன.

  • இந்தியாவில் நீர் வளங்களை அளவிற்கு அதிகமாக பயன்படுத்துவதால்  நன்னீரின் அளவு மிகவும் குறைந்துள்ளதாக புவியை பூமியை கண்காணித்து நாசாவின் செயற்கைக்கோள் தகவல் தெரிவித்துள்ளது.

வணிக & பொருளாதாரம்

பார்சல் சரக்கு எக்ஸ்பிரஸ் ரயில் (PCET)             

  • அஸ்ஸாமின் கவுகாத்தியில் மகாராஷ்டிராவின் கல்யாண் நிலையம் வரையிலான புதிய பார்சல் சரக்கு சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி  2018-19 ல் 7.6% ஆக உயரும்: U.N. அறிக்கை

  • 2017-17 ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாகவும் 2018-19 ல் 7.6 சதவீதமாகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி ஆயோகின் மூன்று நாள் வென்ச்சர் கேபிடல் சிம்போசியம் 2018

  • விஷன் இந்தியா பவுன்டேஷன் உடன் இணைந்து நிதி ஆயோக்  பிரான்ஸ் மற்றும் இந்தியாவுடனான பொருளாதார உறவுகளை ஆழப்படுத்த வென்ச்சர் கேபிடல் சிம்போசியம் 2018 ஐ ஏற்பாடு செய்துள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU),ஒப்பந்தங்கள்& மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா மற்றும் இந்தோனேசியா  கடல்சார் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை ஊக்குவிக்கின்றன

  • இந்திய மற்றும் இந்தோனேசியாவிற்கான கடல்வழி பயிற்சி மற்றும் கல்வி ஆகியவற்றில் ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்ய , இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் இந்தோனேசிய கல்வி நிறுவனங்களுக்கிடையே கடல் சார்ந்த படிப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது .

தில்லியில் உள்ள 1000 பேருந்துகளை கொள்முதல் செய்வதற்காக டெல்லியில் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

  • தில்லி அமைச்சரவை ,1000 சிஎன்ஜி யில் இயங்கும் பஸ்களை கொள்முதல் செய்யும்  ஒரு திட்டத்திற்கு  ஒப்புதல் வழங்கியது.

மாநாடுகள்     

தென்னாப்பிரிக்காவில் டர்பனில் 4 வது பிரிக்ஸ் மந்திரி கூட்டம்

  • வளம் குறைபாடு மற்றும் பற்றாக்குறை சம்பந்தமான விஷயங்களுக்காக மற்றும் வளங்களை ஒரு நியாயமான முறையில் பயன்படுத்துவதற்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) கலாசார மந்திரிகள் கூட்டம்

  • சன்யாவில் , 2018, மே 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் நடைபெற்ற ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு (SCO) உறுப்பு நாடுகளின் கலாச்சார அமைச்சர்களின் 15 வது கூட்டத்தை  டாக்டர் மகேஷ் சர்மா தலைமை தாங்கினார்.

தரவரிசை & குறியீடுகள்

உலகின் மிகப் பெரிய நகரம் : ஐ.நா. அறிக்கை

  • தில்லி உலகிலேயே மிகப்பெரிய நகரமாக மாறும் என ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது.

விருதுகள்

எஸ் அண்ட் பி பிளாட்ஸ் குளோபல் மெட்டல்ஸ் விருது

  • லண்டனில் 17.05.2018 அன்று நடைபெற்ற நிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR) பிரிவில் NMDC லிமிடெட் மதிப்புமிக்க எஸ் அண்ட் பி பிளாட்ஸ் குளோபல் மெட்டல்ஸ் விருது 2018 ஐ பெற்றுள்ளது.

கேரளா சுற்றுலாத் துறைக்கு  முகநூல் லாரல் கிடைத்துள்ளது

  • கேரளா சுற்றுலாத் துறை முகநூல் பக்கத்தில் அதிக லைக்குகளை பெற்று உள்ளது.

நியமனங்கள்

மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி

  • நீதிபதி ராமலிங்கம் சுதாகர் மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

NHAI தலைவர்

  • சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு செயலாளர் யுதிர்வீர் சிங் மாலிக்கிற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) தலைவர் பதவி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

தெற்காசிய ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குனர்

  • சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சிந்தனைக் குழுவான தெற்காசிய ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குனராக இந்திய கல்வி மற்றும் வெளிநாட்டு கொள்கை ஆய்வாளர் சி. ராஜா மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பேட்மின்டன் ஆசியா கூட்டமைப்பின் துணைத் தலைவர்

  • ஹிமான்டா பிஸ்வா சர்மா ஆண்டு பொது கூட்டத்தில் பேட்மின்டன் ஆசியா கூட்டமைப்பின் (பிஏசி) துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கினா ஹெஸ்பெல் – சிஐஏவின் முதல் பெண் இயக்குநர்

  • ஜினா ஹெஸ்பெல் முதன்முதலாக CIA தலைவரான முதல் பெண்மணி ஆவார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!