நடப்பு நிகழ்வுகள் மே 17

0

நடப்பு நிகழ்வுகள் மே 17

முக்கியமான நாட்கள்

மே 17: உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம்

  • உலக தகவல் சமூக நாள் (World Information Society Day) என்று ஒவ்வொரு ஆண்டும் மே 17ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இது குறித்து அறிவிப்பு 2005ஆம் ஆண்டு தூனிசில் நடந்த தகவல் சமூகத்திற்கான உலக மாநாட்டை அடுத்து ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானம் மூலம் அறிவிக்கப்பட்டது.
  • நவம்பர் 2006 துருக்கியில் உள்ள அன்டால்யாவில் நடந்த பன்னாட்டுத் தொலைதொடர்பு ஒன்றியத்தின் முழு அதிகாரம் கொண்ட மாநாடு இரு நிகழ்வுகளையும் ஒன்றுபடுத்தி உலகத் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக நாளாகக் கொண்டாட தீர்மானித்தது.

தேசிய செய்திகள்               

கேரளம்

கிராமப்புற கண்டுபிடிப்பாளர்கள் கூட்டம்

  • கிராமப்புற கண்டுபிடிப்பாளர்கள் கூட்டத்தை கேரளா மாநில அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் கழகம் (KSCSTE) மற்றும் எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை- கம்யூனிட்டி ஆக்ரோபயோடைவர்சிட்டி சென்டர் (CABC) கூட்டு சேர்ந்து மூன்று நாட்கள் ஏற்பாடு செய்துள்ளது.

ஒடிசா

ஒடிசாவில் ‘ஒரு பார், ஒரு வாக்கு’

  • நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் பயிற்சியில் உள்ள உண்மையான வக்கீல்களின் எண்ணிக்கையை அடையாளம் காண, 2015 ல் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள ஒரு வழிகாட்டியின் ஒரு பகுதியாக, ‘ஒரு பார், ஒரு வாக்கு’ விதிகள் அமைந்துள்ளது.

ஆந்திர பிரதேசம்

“ஓங்கோல் மாடுகளின் பால் சேமிப்பு”திட்டம் தொடங்கப்பட்டது

  • பிரகாசம் மாவட்ட அபிவிருத்தி மன்றத்தின் கீழ் விவசாயிகளும் சிவில் சமூக அமைப்புகளும் ஓங்கோல் பால் மறுமலர்ச்சிக்கு ஒரு பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளன.ஆந்திர பிரதேசம்

அரியானா

பஜாஜ் முதல் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய  முதல் தந்தை-மகள் இரட்டையர் ஆவர்

  • 24 வயதான தீயா சூசன்னா அவரது தந்தை அஜீத் பஜாஜ் உடன் இணைந்து, உலகின் மிக உயர்ந்த சிகரமான மவுண்ட் எவரெஸ்ட் ஏறிய  முதல் இந்திய தந்தை-மகள் இரட்டையர் ஆவர் .

சர்வதேச செய்திகள்

மலேசியா  ஜிஎஸ்டியை அகற்றிவிட்டு விற்பனை மற்றும் சேவை வரியை  அறிமுகப்படுத்தியது

  • மஹதிர் முகமத் தலைமையிலான மலேசிய அரசாங்கம், சரக்குகள் மற்றும் சேவை வரியினால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடு செய்வதற்காக விற்பனை மற்றும் சேவை வரி (எஸ்.எஸ்.டி) வரும் ஜூனிலிருந்து அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

அறிவியல் செய்திகள்

அமெரிக்க அணியின் ஸ்மார்ட் போன் பேட்டரி  வாழ்நாளை அதிகரிக்கச்  செய்யும் புதிய சாதனம்

  • ஸ்மார்ட் போன் பேட்டரி வாழ்நாளை 100 மடங்கு  அதிகரிக்க முடியும் என்று  அமெரிக்க அணி புதிய சாதனம் கண்டுபிடித்துள்ளனர்.

கர்நாடகாவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட புதிய தவளை இனம்

  • இந்தியாவின் தவளை இனங்களில் சமீபமாக மங்களூருவின் குறுகிய-வாய் தவளை (மைக்ரோஹைலா கொடியல்)சேர்க்கப்பட்டுள்ளது. இது கர்நாடக கரையோரத்தில் ஒரு சிறிய தொழிற்துறை பகுதியில் காணப்படுகிறது.

வணிக & பொருளாதாரம்

தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் யுனிபோர்

  • சென்னையை தலைமையிடமாகக் கொண்ட யுனிபோர் சாப்ட்வேர் சிஸ்டம்ஸ் நிறுவனம் தனது குரல் வழி சேவைகளை மேம்படுத்தும் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. குரல் வழியாக விவசாயம், வேலைவாய்ப்பு, நிதி சார்ந்த சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் இந்த நிறுவனம் 2008-ம் ஆண்டு சென்னை ஐஐடி-யில் உருவாக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனமாகும்.

மருந்து தயாரிப்பாளர் கிரானுல்ஸ் ‘ANDA USFDA  இன் அனுமதியை பெற்றுள்ளது.

  • அமெரிக்கன் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (யுஎஸ்பிஎஃடி ஏ )கிரானுல்ஸ் இந்தியா லிமிடெட்டின் Methylergonovine 0.2 மில்லி மாத்திரையின்  அப்பிரிவேட்டட் நியூ ட்ரக் அப்ளிகேஷன்  (ANDA) க்கு ஒப்புதல் அளித்துள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU),ஒப்பந்தங்கள்& மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரிலையன்ஸ் பவர் திலயா திட்டத்தை விட்டு விலகியது

  • ரிலையன்ஸ் பவர் லிமிடெட் ஜார்கண்டிலுள்ள திலயாவில் ஒரு மிகப்பெரிய மெகா மின் திட்டத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள சிறப்பு நோக்கத்த்தை விட்டு வெளியேறிவிட்டது.

விருதுகள்

தொழில்நுட்ப தலைமைத்துவ விருது 2017: பி.சிவகுமார்

2016 ஆண்டின் விஞ்ஞானி’.: Y.S.T. ராஜு

2017 ஆண்டின் விஞ்ஞானி’.: s .பழனிகுமார்

நியமனங்கள்

அமெரிக்க-இந்திய வணிகக் கவுன்சில் (USIBC) தலைவராக அம்பிகா சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  • அமெரிக்க-இந்திய வணிகக் கவுன்சிலின் புதிய தலைவராக அம்பிகா சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

மொபைல் செயலிகள் & வலைதளம்

வங்கி வாடிக்கையாளர்களுக்கு போரம்  தொடங்கப்பட்டது

  • தமிழ்நாடு வங்கி பயனர்களின் நலன்புரி சங்கம், , வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு வங்கியியல் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குவதற்கு ஒரு இலாப நோக்கற்ற போரம் தொடங்கியுள்ளது.

விளையாட்டு செய்திகள்

ஹாக்கி

  • மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

கால்பந்து

  • அட்லெடிகோ மாட்ரிட் மார்சேயில்லை தோற்கடித்து மூன்றாவது முறையாக யூரோபா லீக் வென்றது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!