தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகள் அக். 10 முதல் திறப்பு – இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பு!

0
தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகள் அக். 10 முதல் திறப்பு - இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பு!
தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகள் அக். 10 முதல் திறப்பு - இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பு!
தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகள் அக். 10 முதல் திறப்பு – இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள மெட்ரிக் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மீண்டும் பள்ளிகள் வருகிற 10 ஆம் தேதி திங்கள்கிழமை திறக்க வேண்டும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்த ஆண்டு பொது காலாண்டு தேர்வு இல்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. அதனை தொடர்ந்து செப். 30 ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு தேர்வுகளை நடத்தி முடித்து விடுமுறை விட வேண்டும் என கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டது. மேலும் பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புகளுக்கு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் திறப்பது குறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பின் படி மெட்ரிகுலேசன் பள்ளிகளும் வருகிற 10 ஆம் தேதி திங்கள்கிழமை திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு – இனி இதை செய்தால் கடும் நடவடிக்கை!!

Exams Daily Mobile App Download

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் எண்ணும் எழுத்துப் பயிற்சித் திட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதால், பள்ளி மற்றும் தொடக்கக் கல்வியின் கட்டுப்பாட்டில் உள்ள 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புகளுக்கு வருகிற 10 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மெட்ரிக் பள்ளிகளும் அக். 10 ஆம் தேதி திறக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிபிஎஸ்இ பள்ளிகள் விடுமுறை முடிந்து நாளை (அக். 6) முதல் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!