TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – ஆங்கிலம், கணித பாட அட்டவணை!

0
TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - ஆங்கிலம், கணித பாட அட்டவணை!
TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - ஆங்கிலம், கணித பாட அட்டவணை!
TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – ஆங்கிலம், கணித பாட அட்டவணை!

தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான தேர்வு அட்டவணையை கடந்த சில நாட்களுக்கு முன் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதையடுத்து கணிதம், ஆங்கிலம், கணினி அறிவியல் பாடங்களுக்கான தேர்வு தேதியை வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த சூழலில் அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப பல்வேறு அறிவிப்புகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான தேர்வு கால அட்டவணையை கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி அன்று வெளியிட்டது. அதன்படி இத்தேர்வானது பிப்ரவரி 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலம் என்பதால் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் முறையில் கணினி வழியில் நடத்தப்படும் என்றும் வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழக குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலை – தேர்வு கிடையாது..!

இந்த தேர்வு கால அட்டவணையில் கணிதம், ஆங்கிலம், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு தேதிகள் இடம் பெறாமல் இருந்தது. தற்போது இந்த 3 பாடங்களுக்கும் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. மேலும் இது குறித்து அறிவிப்பை தேர்வு வாரியத் தலைவர் ஜி.லதா அவர்கள் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். இதில் கூறியதாவது, கணிதத் தேர்வு வருகிற பிப்ரவரி 16ம் தேதி காலை, மதியம் மற்றும் 17 ஆம் தேதி காலை நடைபெறும் என்றும் ஆங்கில தேர்வு 17ம் தேதி பிற்பகல் மற்றும் 18ம் தேதி காலை, மதியம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

இரவு ஊரடங்கு ரத்து முதல் பள்ளிகள் திறப்பு வரை – மாநில அரசுகளின் அறிவிப்புகள்!

மேலும் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 19ம் தேதி அன்று நடைபெறும் என்று அரசு தெரிவித்துள்ளது. அதனால் பிப்ரவரி 19ம் தேதி அன்று தேர்வு கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 20ம் தேதி காலை கணினி அறிவியல் பாடத் தேர்வு நடைபெறும். இதனை தொடர்ந்து இந்த தேர்வுக்கான நுழைவுச்சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தேர்வு வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!