பெண் வீரர்களுக்கு மகப்பேறு விடுப்பு – மத்திய அமைச்சர் ஒப்புதல்.. மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியாவின் ஆயுதப்படை பிரிவுகளில் பணிபுரியும் பெண் வீரர்கள் மற்றும் மாலுமிகளுக்கான மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்புக்கான விடுப்புக்கு மத்திய அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.
மகப்பேறு விடுப்பு:
இந்திய ஆயுதப்படைகளில் பணியாற்றும் பெண் வீரர்கள் பெண் மாலுமிகள் மற்றும் பெண் விமானப்படை வீரர்களுக்கான மகப்பேறு குழந்தை பராமரிப்பு மற்றும் குழந்தை தத்தெடுப்பு போன்ற விடுப்புகள் அவர்களின் அதிகாரிகளுக்கு இணையாக வழங்குவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு தற்போது முன்மொழிவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த அறிவிப்பு வீரர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
நவ.16 தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – காரணம் இது தான்!
இதன் மூலம் பாதுகாப்பு பிரிவில் பெண்கள் அதிகாரியாக இருந்தாலும் அல்லது வேறு பதவியில் இருந்தாலும் அவர்களுக்கான விடுப்புகள் சம அளவில் இருக்கும். மேலும் இந்த விடுப்பு விதிமுறை ஆயுதப்படைகளுடன் தொடர்புடைய அனைத்து பெண்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் பயனளிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக ராணுவத்தில் பெண்களின் பணி சூழலில் மேம்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.