தமிழக அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 12 மாதங்களாக நீட்டிப்பு – பட்ஜெட் தாக்கல்!
தமிழகத்தில் மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு பட்ஜெட்:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று, ஆட்சி பொறுப்பேற்று பல மாதங்கள் ஆன நிலையில் 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று (ஆகஸ்ட் 13) தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று சென்னையில் தாக்கல் செய்துள்ளார்.
TN Budget 2021 Live Updates – தமிழக அரசின் இ-பட்ஜெட் தாக்கல்!
அதில் அரசு துறைகளில் பணிபுரிந்து வரும் மகளிர் ஊழியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு ஏற்கனவே 9 மாதங்களாக உள்ள நிலையில் தற்போது கூடுதலாக 3 மாதங்கள் நீடிக்கப்பட்டு, 12 மாதங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், மகப்பேறு நிதி உதவித் திட்டத்திற்கு 959.20 கோடி ஒதுக்கீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
நாளை வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இதனையடுத்து, பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 16-ம் தேதி முதல் 19 வரை நடைபெற உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.