சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – RCB உடன் வெற்றிக்கு பிறகு புள்ளி அட்டவணை!

0
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு - RCB உடன் வெற்றிக்கு பிறகு புள்ளி அட்டவணை!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு - RCB உடன் வெற்றிக்கு பிறகு புள்ளி அட்டவணை!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – RCB உடன் வெற்றிக்கு பிறகு புள்ளி அட்டவணை!

IPLல் நேற்று (ஏப்ரல்.12) நடைபெற்ற CSK vs RCB ஆட்டத்துடன் இந்த சீசனுக்கான போட்டிகளின் புதுப்பிக்கப்பட்ட புள்ளிகள் அட்டவணை, ஆரஞ்சு தொப்பி மற்றும் ஊதா நிற தொப்பி போன்ற விவரங்களை இப்பதிவில் விரிவாக காணலாம்.

புள்ளி அட்டவணை

கடந்த 4 ஆட்டங்களில் கடுமையான தோல்வியை தழுவி இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று (ஏப்ரல்.12) நடைபெற்ற போட்டியில் ஷிவம் துபே மற்றும் மகேஷ் தீக்ஷனாவின் அபாரமான ஆட்டத்தால் தற்போது வெற்றிக் கணக்கை துவங்கி இருக்கிறது. அந்த வகையில் மகேஷ் தீக்ஷனாவின் 4 விக்கெட்டுகள் மற்றும் ஷிவம் துபேவின் 95 ரன்கள் மூலம் ஐபிஎல் 2022ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் வெற்றிக் கனியை பறித்தது. இந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் CSK தோற்கடித்தது.

தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை – போக்குவரத்துத்துறை முக்கிய அறிவிப்பு!

இந்த போட்டியில் இன்னிங்ஸின் பெரும்பகுதியில் CSK முன்னோக்கி இருப்பது போல் தோன்றியது. ஏனென்றால் 20 ஓவரில் 217 ரன்களை அதுவும் முக்கியமான விக்கெட்டுகளை இழந்து சேஸ் செய்வது RCB அணிக்கு எளிதான விஷயமாக இல்லை. ஆனால் சுயாஷ் பிரபுதேசாய் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் கேமியோக்கள் RCB ஐ இலக்கிற்கு மிக அருகில் கொண்டு சென்றது. இதற்கிடையில் 18வது ஓவரில் தினேஷ் கார்த்திக் பவுண்டரியில் சிக்கியபோது தான் சிஎஸ்கே அணியால் நிம்மதி பெருமூச்சு விட முடிந்தது. அதுவரை 13 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்த தினேஷ் கார்த்திக் பின்னர் ஆட்டமிழந்தார்.

அதே போல CSK அணியை பொறுத்தமட்டில் துபே 8 சிக்ஸர்களுடன் 95 ரன்களும், ராபின் உத்தப்பா 9 சிக்ஸர்களுடன் 88 ரன்களும் எடுத்தனர். மெதுவாக துவங்கிய இவர்கள் இருவரும் விரைவில் தங்கள் அரை சதங்களை ஒன்றன் பின் ஒன்றாக பூர்த்தி செய்தனர். அந்த வகையில் 11வது முதல் 20வது ஓவர்கள் வரை இருவரும் இணைந்து 156 ரன்களை எடுத்தனர். கடைசி ஓவரில், டியூப் ஹேசல்வுட் இரண்டு சிக்ஸர்கள் அடித்து அவுட் ஆகி ஆட்டத்தை நிறைவு செய்தார். மேலும், RCB அணியை பொறுத்தமட்டில் முதல் 10 ஓவர்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்ததால் RCB சரியான தொடக்கத்தை கொடுக்கவில்லை.

அதாவது, 3வது ஓவரிலேயே ஃபாஃப் டு பிளெசிஸ், விராட் கோலி ஆகியோர் விலக கிளென் மேக்ஸ்வெல் மற்றும் அனுஜ் ராவத் தொடர்ந்து ஏமாற்றம் அளித்தனர். இவர்களில் ஷாபாஸ் அகமது மற்றும் சுயாஷ் பிரபுதேசாய் ஆகியோர் 50+ பார்ட்னர்ஷிப்பை வைத்திருந்தனர். இறுதியில், இந்த சீசனில் 2வது ஆட்டத்தில் தோற்றதால் RCB அணிக்கு இப்போது இறுக்கம் அதிகமாகி இருக்கிறது. இப்போது CSK vs RCB ஆட்டத்திற்கு பின்பாக புதுப்பிக்கப்பட்ட புள்ளிகள் அட்டவணை, ஆரஞ்சு தொப்பி மற்றும் ஊதா நிற தொப்பி ஆகிய விவரங்களை இப்போது பார்க்கலாம்.

புள்ளி பட்டியல்:

இந்த வெற்றி CSK அணிக்கு முதல் புள்ளிகளை வழங்கியது. RCB ஆட்டத்தில் தோற்றிருக்கலாம். ஆனால் அவர்கள் இலக்கை நெருங்கிவிட்டதால் அவர்களின் நிகர ரன் விகிதம் மோசமாக பாதிக்கவில்லை.

ஆரஞ்சு தொப்பி:

ராபின் உத்தப்பா மற்றும் ஷிவம் துபே ஆகியோர் ஆரஞ்சு தொப்பிக்கான பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். உத்தப்பா இப்போது 194 ரன்களுடன் 3 வது இடத்திலும், துபே 207 ரன்களுடன் 2 வது இடத்திலும் உள்ளனர்.

ஊதா தொப்பி:

இறுதியில் வனிந்து ஹஸ்ரங்கா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதால் மொத்தம் 10 விக்கெட்டுகள் கைப்பற்றியவராக ஊதா தொப்பி புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!