CA படிப்புக்கு முதுநிலை அந்தஸ்து – யுஜிசி ஒப்புதல்!!

0
CA படிப்புக்கு முதுநிலை அந்தஸ்து - யுஜிசி ஒப்புதல்!!
CA படிப்புக்கு முதுநிலை அந்தஸ்து - யுஜிசி ஒப்புதல்!!
CA படிப்புக்கு முதுநிலை அந்தஸ்து – யுஜிசி ஒப்புதல்!!

CA போன்ற கணக்கியல் படிப்புகளுக்கு முதுநிலை அந்தஸ்து வழங்கி யுஜிசி ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் கணக்கு தணிக்கையியல் படிப்பு முடித்தவர்கள் நேரடியாக ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.

CA கணக்கியல் படிப்பு:

கணக்கியல் படிப்பில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு ஏற்ற தொழிலாக பட்டய கணக்காளர்கள் பணி இருந்து வருகிறது. நாட்டில் அதிக வருவாய் ஈட்டும் முக்கிய தொழிலாக இந்த கணக்காளர்கள் பணி கருதப்படுகிறது. நிதித்துறை, தனியார் வணிகங்கள் போன்ற பல தொழில் நிறுவனங்களில் இந்த கணக்காளர் பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் ஒருவர் அமர்வதற்கு CA என்ற கணக்கியல் படிப்பு முடித்திருக்க வேண்டும். இந்த கணக்கியல் படிப்பை முடித்தவர்களுக்கு முதுநிலை அந்தஸ்து வழங்கி ஒரு சிறந்த வாய்ப்பை அறிவித்துள்ளது யுஜிசி அமைப்பு.

TN Job “FB  Group” Join Now

அதன்படி CA முடித்த மாணவர்கள் நேரடியாக தங்களது ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளலாம். பொதுவாக +2 படித்த மாணவர்கள் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை, எம்.பில் போன்ற படிப்புகளை நிறைவு செய்த பின்னரே பி.எச்.டி போன்ற ஆராய்ச்சி படிப்புகளை படிக்க முடியும். இந்த கஷ்டங்கள் எதுவும் இல்லாமல் CA முடித்தவர்கள் நேரடியாக ஆய்வு படிப்புகளை மேற்கொள்ள சிறந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய பயணிகள் விமானங்களுக்கு 30 நாட்கள் தடை – கனடா அரசு அறிவிப்பு!!

இது குறித்து யுஜிசி சார்பில் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘ஐசிஏஇ கணக்கு தணிக்கையாளர் அமைப்பு, ஐசிஎஸ்ஐ என்ற நிறுவனர் செயலர்கள் அமைப்பு, ஐசிஏஐ என்ற விலை கணக்கீட்டாளர் அமைப்பு ஆகியவற்றில் இருந்து கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளது. அந்த மனுக்களை கருத்தில் கொண்டு சிஏசிஎஸ், ஐசிடபிள்யூஏ ஆகிய படிப்புகளுக்கு முதுநிலை படிப்புக்கு நிகரான அந்தஸ்து வழங்கப்படுகிறது. யுஜிசி அமைப்பு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!