மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி ஒரு எபிசோடுக்கு விஜய் சேதுபதிக்கு வழங்கப்படும் சம்பளம்! – போதுமா சார்?

0
மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி ஒரு எபிசோடுக்கு
மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி ஒரு எபிசோடுக்கு

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி ஒரு எபிசோடுக்கு விஜய் சேதுபதிக்கு வழங்கப்படும் சம்பளம்! – போதுமா சார்?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்கு விஜய் சேதுபதிக்கு வழங்கப்படும் சம்பளத்தை பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

மாஸ்டர் செஃப்:

சர்வதேச அளவில் பிரபலமான சமையல் போட்டி மாஸ்டர் செஃப் ஆகும். உலகம் முழுவதும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இந்தியாவில் இதுவரை ஹிந்தியில் மட்டுமே ஒளிபரப்பாகியது. சமையலை தங்கள் வாழ்வாக கொண்டவர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள மாட்டோமா என்று மிகுந்த எதிர்பார்ப்பில் இருப்பார்கள். அந்த அளவுக்கு இந்த மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி சமையலை முக்கியத்துவப்படுத்தும் நிகழ்ச்சியாகும்.

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி செலுத்திய நடிகர் விஜய் – தமிழக அரசு தரப்பு!

நிகழ்ச்சியை வெளித்திரையின் முன்னணி கதாநாயகனாக இருக்கும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க, உலகத் தரம் வாய்ந்த செஃப்களான ஆர்த்தி சம்பத், ஹரீஷ் ராவ், கௌசிக் ஆகியோர் நடுவர்களாக இருக்கின்றனர். இந்த ஷோவின் தெலுங்கு மொழியில் நடிகை தமன்னா தொகுப்பாளராக களமிறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதிக்கு ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ஒரு எபிசோடுக்கு 50 லட்சம் ரூபாய் சம்பளமாக தரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் கொரோனா சிறப்பு விடுமுறை – மாநில அரசு அனுமதி!

மேலும், இது தவிர சன் டிவியுடன் விஜய் சேதுபதி, 15 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் இருக்கிறாராம். கூடுதலாக விஜய் சேதுபதி நடித்த ‘லாபம்’, ‘துக்ளக் தர்பார்’ உள்ளிட்ட படங்களின் உரிமையையும் சன் டிவி பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர்கள் திரைப்படத்தில் மாதக்கணக்கில் நடித்து வாங்கும் சம்பளத்தை சின்னத்திரையிலும் ஒரு சில எபிசோடுகளில் பெற்று வருவதால் தான் மெகா ஹிட் நடிகர்கள் கூட சின்னத்திரையில் காலெடுத்து வைக்க தொடங்கியுள்ளனர் என்பது இதன் மூலம் தெரியவருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!