ஒரு வார இடைவெளியில் அடுத்தடுத்து 4 படங்கள் ரிலீஸ் – மாஸ் காட்டும் விஜய் சேதுபதி!
கொரோனா காலத்தில் பொழுதுபோக்கு இன்றி ரசிகர்கள் டஹ்விக்கும் சூழலில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து 4 படங்கள் ஒரு வார இடைவெளியில் ரிலீசாக உள்ளது.
மாஸ் ஹீரோ:
கடந்த வருடம் கொரோனா தொற்று பரவல் ஆரம்பித்ததில் இருந்து திரை உலகம் சுருண்டு விட்டது என்றே சொல்லலாம். திரைப்படங்கள் எடுக்கப்பட்டு திரையரங்கம் வருவதற்கு தயார் நிலையில் உள்ள போதிலும், ஊரடங்கு தடை உத்தரவுகளினால் அனைத்தும் முடங்கி விட்டது. தற்போது கடந்த வாரம் முதல் தான் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த வாரம் முதல் திரையரங்கம் அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும், பெரிய படங்கள் ஏதும் ரிலீஸ் ஆகாமல் உள்ளதால் தியேட்டர்கள் அனைத்தும் மூடிய நிலையில் தான் உள்ளது.
டாப் சீரியல்களின் எதிர்பார்ப்பை கிளப்பிய ப்ரமோ வீடியோ – ஒரு அலசல்!
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியின் படங்கள் திரைக்கு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளதால் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். பிற நடிகர்கள் வருடத்திற்கு ஒரு திரைப்படம் நடிக்கவே தடுமாறிக் கொண்டிருக்க வருடத்திற்கு 6 படங்களுக்கு மேல் நடித்து தனது அபாரமான உழைப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. வெவ்வேறு கதையம்சம் கொண்ட கதாபாத்திரங்களில் நடிக்கும் சிறந்த நடிகர் விஜய் சேதுபதி. அதனால் அவருக்கு அனைத்து தரப்புகளில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளனர்.
SSC மற்றும் TNPSC போட்டித் தேர்வர்களுக்கு இலவச பயிற்சி – மாவட்ட நிர்வாகம்!
ஊரடங்கு காலத்தில் நடந்த படப்பிடிப்புகள் மூலம் 4 படங்கள் விஜய் சேதுபதிக்கு ரிலீசுக்கு தயாராக இருந்தது. இந்த படங்கள் இனி வரும் வாரங்களில் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது. எஸ் பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள லாபம் திரைப்படம் செப்டம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த நாளான செப்டம்பர் 10-ஆம் தேதி விஜய் சேதுபதி நடிப்பில் டெல்லி பிரசாத் தீன தயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள, துக்ளக் தர்பார் திரைப்படம் சன் தொலைக்காட்சியில் நேரடியாக தொலைக்காட்சியில் முதல்முறை ஒளிபரப்பாகவிருக்கிறது.
TN Job “FB
Group” Join Now
இதேநாளில் நெட்பிளிக்ஸ் வலைதளத்திலும் இந்த திரைப்படம் வெளியாகிறது. அதே நாளில், மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி திரைப்படமும் சோனி லிவ் வலைதளத்தில் வெளியாக உள்ளது. இந்த மூன்று திரைப்படங்கள் வெளியான ஒரு வார இடைவெளியில் செப்டம்பர் 17-ஆம் தேதி தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டாப்ஸி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள அனபெல் சேதுபதி திரைப்படம் ஹாட்ஸ்டார் வலைதளத்தில் வெளியாக உள்ளது.