மீண்டும் பள்ளிகள் மூடல்? அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! முகக்கவசம் கட்டாயம் என அறிவிப்பு!

0
மீண்டும் பள்ளிகள் மூடல்? அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! முகக்கவசம் கட்டாயம் என அறிவிப்பு!
மீண்டும் பள்ளிகள் மூடல்? அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! முகக்கவசம் கட்டாயம் என அறிவிப்பு!
மீண்டும் பள்ளிகள் மூடல்? அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! முகக்கவசம் கட்டாயம் என அறிவிப்பு!

டெல்லியில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில் பள்ளிகள் மீண்டும் மூடப்படாது என்றும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசங்களை அணிவது கட்டாயம் என்றும் அரசு அறிவித்துள்ளது.

பள்ளிகள் மூடல்

கடந்த ஒரு சில நாட்களாக தேசிய தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்புகள் மெல்ல ஏற்றம் கண்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா 3ம் அலைப்பரவலுக்கு பிற்பாடு கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு மக்கள் இப்போதுதான் மீண்டுமாக இயல்புநிலைக்கு திரும்பி வரத்துவங்கியுள்ளனர். இதற்கிடையில் கடந்த மாதம் முதல் அனைத்து கொரோனா பரவல் கட்டுப்பாடுகளையும் அரசு திரும்ப பெறுவதாக அறிவித்தது. இந்த சூழலில் தற்போது இந்தியாவில் மீண்டுமாக கொரோனா பரவல் பாதிப்புகள் வேகமெடுக்க துவங்கி இருக்கிறது.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி சத்துணவில் தேங்காய் துண்டு!

இருப்பினும், டெல்லியில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் தொடர்பாக டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் முடிவடைந்த நிலையில் DDMA புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதற்கிடையில் டெல்லி பள்ளிகளில் கொரோனா தொற்று பதிவாகியிருப்பதை DDMA கவனித்துள்ளது. குறிப்பாக டெல்லி என்சிஆர் பிராந்திய பள்ளிகள் ஊழியர்கள் மற்றும் மாணவர்களிடையே கொரோனா நோய்த்தொற்றுகளைப் புகாரளித்த பின்னர் அதன் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த விஷயங்கள் காரணமாக, மீண்டும் முகக்கவசங்களை அணியும் ஆணை கொண்டுவரப்பட்டு, மக்கள் அனைவரும் அவற்றைப் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கான கொரோனா வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் டெல்லியில் உள்ள பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும், ஊழியர்களும் எல்லா நேரங்களிலும் முகக்கவசங்களை அணிய வேண்டும் மற்றும் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளின் முழு இணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதனுடன், டெல்லியில் பொதுமக்களுக்கான பொதுவான வழிகாட்டுதல்கள் மற்றும் முகக்கவசம் இல்லாமல் இருந்தால், ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது நிபுணர்களுடன் கலந்துரையாடிய பிறகு விரிவான கொரோனா பாதுகாப்பு செயல்முறைகள் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கபட்டுள்ளது. அந்த வகையில் டிடிஎம்ஏ வழிகாட்டுதல்களின் அறிவிப்புடன், டெல்லி பள்ளிகள் அவற்றை கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும், டெல்லியில் சமூகக் கூட்டங்களை குறைந்தது ஒரு பதினைந்து நாட்களுக்கு கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!