MASKED ஆதார் கார்டு பதிவிறக்கம் – எளிய வழிமுறைகள் இதோ!!

0
MASKED ஆதார் கார்டு பதிவிறக்கம் - எளிய வழிமுறைகள் இதோ!!
MASKED ஆதார் கார்டு பதிவிறக்கம் - எளிய வழிமுறைகள் இதோ!!
MASKED ஆதார் கார்டு பதிவிறக்கம் – எளிய வழிமுறைகள் இதோ!!

MASKED ஆதார் கார்டு என்பது நம் ஆதார் எண்ணில் உள்ள சில இலக்கங்களை மறைப்பதற்கு பயன்படுத்தப்படும் வசதியாகும். இந்த செயல்பாட்டின் மூலம் ஆதார் அட்டையை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும்.

MASKED ஆதார் கார்டு:

இந்திய அரசின் தனி மனித அடையாளத்துக்காக கொடுக்கப்பட்டுள்ளது ஆதார் அட்டை. இந்த ஆதார் அட்டைகளை பாதுகாப்பாக வைத்திருக்க Masked ஆதார் கார்டு என்ற செயல்முறை உள்ளது. இந்த செயல்முறையின் மூலம் நம் ஆதார் அட்டையின் முதல் 8 இலக்கங்களை மறைக்க முடியும். தேவை ஏற்படின் ஆதார் அட்டையின் கடைசி நான்கு இலக்கங்களை மட்டுமே உபயோகித்து கொள்ளலாம். இந்த Masked ஆதார் அட்டையின் மூலம் அரசின் நலத்திட்டங்கள் ஒன்றும் பெற்றுக்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

TN Job “FB  Group” Join Now

இந்த masked ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய,

  • UIDAI யின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.
  • அதில் My Aadhaar என்ற ஆப்ஷனில் Download Aadhaar என்ற தெரிவை கிளிக் செய்யவும்.
  • பிறகு 12 இலக்க ஆதார் எண்ணை பதிவு செய்யவும்.
  • அதில் I want a Masked Aadhaar என்ற தெரிவை கிளிக் செய்யவும்.
  • பிறகு கொடுக்கப்பட்டுள்ள கேப்ட்சாக் (Captcha) குறியீட்டை பதிவு செய்யவும்.
  • பிறகு send OTP என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
  • OTP எண்ணை சரி பார்த்த பிறகு உங்கள் Masked ஆதார் அட்டை Pdf File படிவத்தில் இருக்கும்.
  • அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வங்கிகளை விட அதிக வட்டி – EPF திட்டத்தின் சிறப்பு சலுகை!!

Enrollment ID பயன்படுத்தி masked ஆதார் அட்டையை பெற

  • UIDAI யின் அதிகாரபூர்வ இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.
  • அதில் My Aadhaar என்ற ஆப்ஷனில் Download Aadhaar என்ற தெரிவை கிளிக் செய்யவும்.
  • இதில் Enrollment ID என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • உங்கள் 14 இலக்க Enrollment ID எண்ணை பதிவிடவும்.
  • இந்த எண் உங்கள் சேர்க்கை (Enrollment) படிவத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்.
  • பிறகு I want a Masked Aadhaar என்ற தெரிவை கிளிக் செய்யவும்.
  • அதில் கொடுக்கப்பட்டுள்ள கேப்ட்சாக் (Captcha) குறியீட்டை பதிவு செய்யவும்.
  • பிறகு Send OTP என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
  • அந்த OTP எண்ணை வைத்து ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Virtual ID பயன்படுத்தி Masked ஆதார் அட்டையை பெற

  • https://uidai.gov.in/ என்ற இணையதள பக்கத்துக்கு செல்லவும்.
  • அதில் my ஆதார் பக்கத்தில் ஆதார் Service ஆப்ஷனை தெரிவு செய்யவும்.
  • பிறகு Virtual ID என்பதை கிளிக் செய்யவும்.
  • அதில் உங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்து கேப்ட்சாக் குறியீட்டை பதிவு செய்யவும்.
  • உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
  • OTP எண்ணை கொடுத்து Virtual ID மூலம் சேவையை துவங்கவும்.
  • My Aadhaar என்ற ஆப்ஷனில் Download Aadhaar என்ற தெரிவை கிளிக் செய்யவும்.
  • அதில் Virtual ID என்பதை தெரிவு செய்து I want a masked Aadhaar என்று கொடுக்கவும்.
  • பிறகு கேப்ட்சாக் குறியீட்டை பதிவு செய்து OTP யை பதிவிடவும்.

Pdf படிவத்தில் இருக்கும் Masked ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!