‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் முன்னாள் ஐஸ்வர்யாவிற்கு திருமணமா? ரசிகர்கள் வாழ்த்து!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலின் முன்னாள் ஐஸ்வர்யாவிற்கு திருமணமா? ரசிகர்கள் வாழ்த்து!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலின் முன்னாள் ஐஸ்வர்யாவிற்கு திருமணமா? ரசிகர்கள் வாழ்த்து!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் முன்னாள் ஐஸ்வர்யாவிற்கு திருமணமா? ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த தீபிகா தற்போது திருமணம் செய்துக்கொள்ள தயார் என்று கூறும்படியான வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யாவிற்கு திருமணம்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பது மூலமாகவே சில நாட்களிலேயே ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகி விடுகின்றனர். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலமாக பிரபலமானவர் தான் தீபிகா. அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் கண்ணனுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தார்.

ExamsDaily Mobile App Download

முகப்பரு பிரச்சனையின் காரணமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து வெளியேற்றப்பட்டார். முகப்பரு சிகிச்சைக்கு பிறகு மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது தீபிகா கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சில்லுனு ஒரு காதல் சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வரைக்கும் மட்டுமே பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து இருப்பார். ஆனால், மூன்று மாதத்திலேயே எக்கச்சக்கமான ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.

அனைத்து உண்மைகளையும் தெரிந்துகொள்ளும் பாக்கியா – தப்பிக்க வழியில்லாமல் விழிக்கும் கோபி!

மேலும், கண்ணன் மற்றும் தீபிகாவின் ஜோடி மக்களுக்கு அதிகமாக பிடித்துவிட்டது. மீண்டும் தீபிகாவை அறிமுகம் செய்யும்படி ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்த நிலையில் இருந்தனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகிய பிறகும் கூட தொடர்ந்து கண்ணன் உடன் நட்பை வளர்ந்துகொண்டே தான் இருக்கிறார். அடிக்கடி ரசிகர்கள் தீபிகாவிடம் உங்களுக்கு எப்போது திருமணம் என கேட்டபடி இருக்கிறார்கள். இதனால் தற்போது ஒரு பேட்டியில் தீபிகா நான் கல்யாணத்துக்கு ரெடி என கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

NPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here