தமிழகத்தில் அரசு சார்பில் ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் – முக்கிய தகவல் இதோ!

0
தமிழகத்தில் அரசு சார்பில் ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் - முக்கிய தகவல் இதோ!
தமிழகத்தில் அரசு சார்பில் ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் - முக்கிய தகவல் இதோ!
தமிழகத்தில் அரசு சார்பில் ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் – முக்கிய தகவல் இதோ!

தமிழகத்தில் ஏழை ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டு அரசு சார்பாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் அக்டோபர் மாதம் ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடத்த தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

இலவச திருமணம்:

தமிழகத்தில் ஏழை எளிய பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் திருமணம் செய்ய அரசு உதவி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆட்சி காலத்தில் 12ம் வகுப்பு முடிக்கப்பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ. 25,000 வழங்கப்பட்டது. மேலும் 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது. அதே போல பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ. 50,000 ரொக்க பணமும் ஒரு பவுன் தங்கமும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது ஏழை ஜோடிகளுக்கு அரசு இலவசமாக திருமணம் செய்து வைத்து வருகிறது.அதாவது இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் திருக்கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபங்களில் இலவசமாக திருமணம் நடத்தும் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்தியாவில் ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – ரயில் சோதனை ஓட்டம்!

இதன் கீழ் ஆயிரக்கணக்கான ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு முதல்வர் இலவச திருமண திட்டத்தின் கீழ் மாற்று திறனாளிகளுக்கு திருமண பதிவு கட்டணம் கிடையாது என்று தெரிவித்தார். மேலும் திருக்கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்திற்கான பராமரிப்புக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. கடந்த மே மாதம் சென்னை திரு.வி.க. நகரில் 9 ஏழை ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார்.

மேலும் மணமக்களுக்கு முதல்வர் அவர்கள் தங்கத் தாலி, பீரோ, கட்டில் உள்ளிட்ட 33 வகை சீர்வரிசை பொருட்களை வழங்கினார். அதனை தொடர்ந்து தற்போது தமிழக கோவில்களில் ஏழை ஜோடிகளுக்கு அக்டோபர் மாதத்தில் இலவச திருமணம் நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி ஒவ்வொரு மண்டலத்திலும் 25 ஏழை ஜோடிகளை தேர்வு செய்து அங்கீகரிக்கப்பட்ட திட்ட செலவின்படி திருமணம் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மணமக்களின் விவரத்தை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து மண்டல இணை ஆணையருக்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!