ஆதாருடன் பான் கார்டை இணைக்க அறிவுரை – மார்ச் 31, 2023 கடைசி நாள்!

0
ஆதாருடன் பான் கார்டை இணைக்க அறிவுரை - மார்ச் 31, 2023 கடைசி நாள்!
ஆதாருடன் பான் கார்டை இணைக்க அறிவுரை - மார்ச் 31, 2023 கடைசி நாள்!
ஆதாருடன் பான் கார்டை இணைக்க அறிவுரை – மார்ச் 31, 2023 கடைசி நாள்!

ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க மார்ச் 31, 2023 ஆம் தேதி வரைக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆதாருடன் பான் கார்டை எவ்வாறு இணைப்பது என்பதற்கான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதார் – பான் இணைப்பு

வருமான வரி தாக்கல் செய்வது மற்றும் மோசடிகளை தவிர்ப்பதற்காக பான் கார்டுடன் ஆதார் கார்டை கட்டாயமாக இணைக்க வேண்டும் என அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதாவது, மார்ச் 31 ஆம் தேதி வரைக்கும் பான் எண்ணுடன் ஆதாரை இலவசமாக இணைத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், மார்ச் 31 ஆம் தேதிக்கு பிறகு பான் கார்டுடன் ஆதாரை இணைத்தால் அபராதம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதாவது, ஏப்ரல் 1, 2022 முதல் ஜூன் 30, 2022 ஆம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைப்பவர்கள் ரூ.500 அபராதமாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஜூன் 30 ஆம் தேதிக்குள்ளும் பான் கார்டுடன் ஆதாரை இணைக்காதவர்கள் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பான் கார்டுடன் ஆதாரை இணைக்க மார்ச் 31, 2023 வரைக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது வரைக்கும் பான் கார்டுடன் ஆதாரை இணைக்காமல் வைத்திருப்பவர்கள் உடனடியாக இணைத்துவிடும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

தற்போது ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைக்கப்பட்டுவிட்டதா என்பதை எப்படி சரிபார்ப்பது என்பதை பார்க்கலாம். முதலில், pan.utiitsl.com அல்லது panaadhaarlink/forms/pan.html/panaadhaar என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று பான் எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்யவும். பின்னர், பாதுகாப்பு கேப்ட்சாவை அதில் உள்ளீடு செய்து கேப்ட்சாவை சமர்ப்பிக்கவும். இதற்கு பின்னர் உங்களது ஆதார் மற்றும் பான் கார்டு எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கான தகவல் திரையில் காண்பிக்கப்படும். இது மட்டுமல்லாமல் SMS மூலமாகவும் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்கலாம். முதலில், UIDPAN என டைப் செய்து 567678 அல்லது 56161 என்கிற எண்ணிற்கு அனுப்ப வேண்டும். இதற்கு பின்னர் நீங்கள் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைத்துவிட்டீர்கள் என்றால் அதில் காண்பிக்கப்பட்டுவிடும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!