மார்ச் 13 – நடப்பு நிகழ்வுகள்

0

தமிழகம்

தமிழகத்தில் 17 மாவட்டங்கள் சுத்தமானவை என அறிவிப்பு

  • தமிழகத்தில் 17 மாவட்டங்கள் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத சுத்தமான மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.
  • தனது சிறப்புரையில், ‘‘தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் 44.56 லட்சம் தனிநபர் கழிப்பறைகள், 2.92 லட்சம் சமுதாய கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. அத்துடன், குப்பைகளில் இருந்து 1.69 லட்சம் டன் உரம் தயாரிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

கடின உழைப்பு நிச்சயம் நம்மை அரியணை ஏற்றும்” 

  • சென்னை வாழ் குமரி மாவட்ட நல சங்கங்களின் சார்பில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவராக பொறுப்பேற்று உள்ள கே.சிவனுக்கு பாராட்டு விழா, சென்னை அம்பத்தூரில் நடந்தது.
  • ‘கடின உழைப்பு நிச்சயம் நம்மை அரியணை ஏற்றும்’ என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறினார்.

இந்தியா

பிரதமருக்கும், குடியரசு தலைவருக்கும் தனி விமானம்

  • நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் தனித்தனியாக விமானங்கள் வரும் 2020ம் ஆண்டுக்குள் வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சபரிமலையில் விமானநிலையம் – கேரள அரசு அறிவிப்பு

  • கேரள மாநிலம், சபரிமலையில் விமானநிலையம் அமைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த ஆய்வு அறிக்கை வரும் 31-ம் தேதிக்குள் தயாராகிவிடும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

மார்ச் 31 காலக்கெடு நீட்டிப்பு

  • ஆதார் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை வங்கிக் கணக்கு, செல்போன் எண், உள்ளிட்ட பல்வேறு சேவைகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலகம்

சிரியாவில் போர் நிறுத்தத் தோல்விக்கு அமெரிக்காவே காரணம்

  • சிரியாவில் போர்  நிறுத்தம் தோல்வி அடைந்ததற்கு அமெரிக்காவே காரணம் என்று  ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மட்டுமே கிம் – ட்ரம்ப் சந்திப்பு

  • வடகொரியா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மட்டுமே கிம் – ட்ரம்ப் சந்திப்பு நடைபெறும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

வணிகம்

வோடஃபோன் 4ஜி சேவை விரிவாக்கம்

  • வோடஃபோன் நிறுவனத்தின் 4ஜி சேவை தமிழகத்தில் 1800-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக வோடஃபோன் தமிழ்நாடு வணிகப் பிரிவின் தலைவர் எஸ்.முரளி தெரிவித்துள்ளார்.
  • ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்கள் நிறுவனத்துக்கு மாறிக்கொள்வதற்கு உதவும் வகையில் வாரத்தின் 7 நாட்களும் தங்களது அலுவலகங்கள் செயல்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

விளையாட்டு

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் 9 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்

  • இந்த ஆண்டுக்கான முதல் ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் கடந்த 1-ம் தேதி மெக்சிகோவின் குவாடலஜரா நகரில் தொடங்கியது.
  • 50 நாடுகளைச் சேர்ந்த 404 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 4 தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தது.

ஐபிஎல் 2018: ‘Best vs Best’ இந்த சீசனுக்கான பாடல் வெளியீடு

  • முதல் முறையாக பிசிசிஐ மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இணைந்து வெளியிட்ட இந்தப் பாடல் பங்கேற்றுள்ள எட்டு அணிகளின் ஸ்டார் வீரர்களின் முக்கிய தருணங்கள் இடம் பெற்றுள்ளன.
  • இந்தப் பாடலை தென் ஆப்பிரிக்காவின் திரைப்பட இயக்குநர் டான் மேக் இயக்கி இருக்கிறார்.
  • இந்தப் பாடல் ஐந்து மொழிகளில் ( ஹிந்தி, தமிழ், பெங்காலி, கன்னடா, தெலுங்கு) பாடப்பட்டுள்ளது . ‘Best vs Best’ என்பதை மையமாகக் கொண்டு இப்பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!