மார்ச் 3 & 4 – நடப்பு நிகழ்வுகள்

0

தமிழகம்

புதுவைக்கு திட்டங்கள் அறிவிக்காததால் மோடி மீது மக்கள் அதிருப்தி: நாராயணசாமி

 • புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி பிரதமர் நரேந்திர மோடி தனது சமீபத்திய பயணத்தின் போது, யூனியன் பிரதேசத்திற்கான எந்தவொரு வளர்ச்சித் திட்டத்தையும் அறிவிக்காதது துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன

 • உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று, காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டதாக மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சென்னையில் தெரிவித்தார்.

சென்னைக்கு வீராணம் ஏரி நீர் குறைப்பு

 • வீராணம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக சரிந்துவருவதால், சென்னைக்கு அனுப்பப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

ஐசிஎப் நிறுவனம் தயாரித்த புதிய வகை மின்சார ரயில்களுக்கு பயணிகளிடையே அதிக வரவேற்பு

 • தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டத்தில் புதிதாக இயக்கப்படும் மின்சார ரயில்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து மேலும் 3 புதிய ரயில் கள் இணைக்கப்பட உள்ளன.
 • காலத்துக்கு ஏற்றவாறு ரயில்களில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்த ரயில்வே மண்டலங்களுக்கு ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் இயங்கும் முக்கிய ரயில்களில் பழைய ரயில் பெட்டிகளுக்கு பதிலாக சொகுசு வசதி கொண்ட எல்எச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன.
 • இதேபோல், புதிய வகை மின்சார ரயில்களை இயக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்தியா

தும்கூரு மாவட்டத்தில் கர்நாடகாவில் உலகின் மிகப்பெரிய சோலார் பூங்கா தொடக்கம்

 • உலகிலேயே மிகப் பெரிய சூரிய ஒளி ( சோலார்) மின் பூங்கா கர்நாடகாவில் ரூ.16,500 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ளது.
 • கர்நாடக அரசின் முயற்சியாலும், 5 கிராம மக்களின் ஒத்துழைப்பாலும் இந்த பெரும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

விடை பெறுகிறார் ‘எளிமையான முதல்வர்’ மாணிக் சர்க்கார்

 • திரிபுராவில் இடதுசாரி கூட்டணி அரசு 25 ஆண்டுகளுக்கு பிறகு பதவியில் இருந்து இறங்குகிறது.
 • அங்கு 20 ஆண்டுகாலம் முதல்வர் பதவி வகித்த எளிமையான முதல்வர் மாணிக் சர்க்கார் விடை பெறுகிறார்.

25 ஆண்டு கால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி முடிவுக்கு வந்தது

 • திரிபுரா சட்டப்பேரவைத் தேர்த லில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது.
 • 25 ஆண்டு கால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
 • நாகாலாந்து, மேகாலயாவில் யாருக் கும் பெரும்பான்மை கிடைக்காததால் பிற கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க பாஜக தீவிர முயற்சி மேற் கொண்டுள்ளது.

உலகம்

ரஷ்யாவின் ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி: எதையும் எதிர்கொள்ள தயார்- அமெரிக்கா திட்டவட்ட அறிவிப்பு

 • ரஷ்யாவின் ஹைப்பர்சானிக் ஏவுகணை உட்பட எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
 • கடந்த டிசம்பர் 1-ம் தேதி நடத்திய அதிநவீன ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனை முழு வெற்றி பெற்றுள்ளது.
 • அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணையை எந்தவொரு ஏவுகணை தடுப்பு அரணாலும் தடுத்து நிறுத்த முடியாது. ஒலியைவிட 20 மடங்கு வேகத்தில் சீறிப் பாயக்கூடியது. உலகின் எந்த மூலையையும் தாக்கும் திறன் கொண்டது.
 • ரஷ்யாவின் தற்காப்புக்காகவே இந்த ஹைப்பர்சானிக் ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது.

‘விண்வெளியில் மூவிழிகள்’: பயங்கர சூறாவளிகளைத் துல்லியமாகக் கண்காணிக்கும் சூப்பர் செயற்கைக் கோள்- நாசா வெற்றிகரம்

 • உலகிலேயே அதிதொழில்நுட்ப வானிலை ஆய்வு செயற்கைக் கோளை நாசா விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தியுள்ளது.
 • இதன் மூலம் மேற்கு அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் பெரும்புயல்கள் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களை இனி துல்லியமாகக் கணிக்க முடியும் என்கிறது நாசா விண்வெளி ஆய்வு மையம்.
 • 11 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய இந்த உயர் தொழில்நுட்ப விண்கலம் நாசாவின் 2வது முயற்சியாகும்.

உலக வனவிலங்குகள் தினம்- விலங்குகளை பாதுகாப்போம்

 • கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி நடைபெற்ற 68வது ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் அரிய வனவிலங்குகளின் சர்வதேச வர்த்தக சாசனத்தில் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டதையடுத்து, மார்ச் 3-ம் தேதியை ‘உலக வனவிலங்குகள்’ தினமாக ஐ.நா அறிவித்தது.

துபாய் புளூ வாட்டர் தீவில் உருவாகும் உலகிலேயே பெரிய ராட்டினம்

 • துபாய் ஜுமைராவில் அய்ன் துபாய் (பழைய துபாய் 1 பகுதி) எனப்படும் பகுதியில் துபாய் ஆட்சியாளர்  ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் உத்தரவின்படி 1.6 கிலோ மீட்டர் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ‘புளூ வாட்டர் தீவு’ என்ற பெயரில் செயற்கை தீவு அமைக்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் வரலாற்றில் முதன்முறையாக இந்து தலித் பெண் எம்.பி.யாக தேர்வு

 • சிந்து மாநிலத்தில் நடந்த எம்.பி தேர்தலில் பெண்களுக்கான பிரிவில் பிலாவல் புட்டோ ஜர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் கிருஷ்ண குமாரி கோல்ஹி (வயது39) எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 • முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பாகிஸ்தானில் சிறுபான்மையாக இருக்கும் இந்து மதத்தினர் சார்பில் ஒரு பெண் எம்.பி.யாக தேர்வு செய்யப்படுவது மிகப் பெரிய மைல்கல்லாகும்.

வணிகம்

அமெரிக்காவின் இறக்குமதி வரி உயர்வால் இந்தியாவுக்கு உடனடியாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை

 • இறக்குமதி வரி விதிப்பை அதிகரிக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முடிவால் இந்தியாவில் உடனடி தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லையென்று இந்திய உருக்குத் துறைச் செயலர் அருணா ஷர்மா தெரிவித்துள்ளார்.

சிஐஐ-க்கு புதிய நிர்வாகிகள்

 • இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் சென்னை மண்டலத்தின் தலைவராக வி.ஆர். மகாதேவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனத்திடமிருந்து பிளிப்கார்ட் ரூ.4,843 கோடி நிதி திரட்டியது

 • சிங்கப்பூரைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனத்திடமிருந்து பிளிப்கார்ட் நிறுவனம் ரூ.4,843 கோடி நிதி திரட்டியுள்ளது.
 • இந்த நிதியை இந்தியாவில் தனது சந்தையை விரிவுபடுத்துவதற்காக செலவிட உள்ளது.
 • அமேசான், அலிபாபா போன்ற ஆன்லைன் போட்டியாளர்களை சமாளிக்க இந்த நிதியை முதலீடு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளையாட்டு

ஐபில் போட்டி: தமிழருக்கு 2-வது மகுடம்

 • ஐபிஎல் போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 2018-ம் ஆண்டு சீசனில் கேப்டனாக தமிழரும், சென்னையைச் சேர்ந்தவருமான தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
 • துணை கேப்டனாக ராபின் உத்தப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.

அஸ்லான்ஷா கோப்பை ஹாக்கி

 • அஸ்லான் ஷா கோப்பைக்கான ஹாக்கித் தொடரில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் 2-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவிடம் தோல்வியடைந்தது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!