மார்ச் 2 – நடப்பு நிகழ்வுகள்

0

தமிழகம்

காவிரி தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால் நிதின் கட்கரி மீது வழக்குப் பதிவு: வைகோ பேட்டி

இந்த ஆண்டு கோடையில் வழக்கத்தை விட வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

 • இந்த ஆண்டு கோடை காலத்தில், முந்தைய ஆண்டுகளில் நிலவிய வழக்கமான வெப்பநிலையை விட சற்று அதிகமாக (0.5 டிகிரி செல்சியஸ்) இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை; முகாந்திரம் இருந்தால் விஜயேந்திரர் மீது வழக்குப் பதிவு செய்யலாம்: 

 • தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதித்ததாக விஜயேந்திரர் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா

நிர்பயா நிதியத்தில் இருந்து பெண்களின் பாதுகாப்புக்காக ரூ.2,900 கோடி அனுமதி:

 • நிர்பயா நிதியில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான ரூ.2,900 கோடி மதிப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட 8 நகரங்கள் பயன் அடையும்.

பெண்கள் மட்டுமே பணிபுரியும் பிராங்கிபுரம் ரயில் நிலையம்

 • ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிராங்கிபுரம் கிராமத்தில்தான் பெண்கள் மட்டுமே பணிபுரியும் ரயில் நிலையம் அமைந்துள்ளது. குண்டூர் – நர்சரோபேட் வரையில் உள்ள இடங்களை உள்ளடக்கி பிராங்கிபுரம் ரயில் நிலையத்துல் ஸ்டேஷன் மாஸ்டர், பயணசீட்டை சரிப்பார்பவர் என அனைவரும் பெண்கள்தான்.
 • ஜெப்பூரின் காந்தி நகர் ரயில் நிலையம், இந்தியாவின் மாடுங்கா ரயில் நிலைத்திற்கு பிறகு பெண்கள் மட்டுமே பணிபுரியும் மூன்றாவது ரயில் நிலையமாக பிரங்கிபுரம் உள்ளது.

உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: கவுதம் அதானியின் சொத்துக்கள் ஓர் ஆண்டில் ரூ.92 ஆயிரம் கோடியாக உயர்வு

 • நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபரும், பிரதமர் மோடியின் நண்பருமான கவுதம் அதானியின் சொத்துக்கள் கடந்த ஓர் ஆண்டில் இரு மடங்கு உயர்ந்துள்ளது.
 • அவரின் தொழில், வர்த்தகம் 109 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என்று ஷாங்காய் நகரில் இருந்து வெளியாகும் புகழ்பெற்ற ஹருன் குளோபல் இதழ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகம்

புற்று நோய் குறித்த ஆராய்ச்சியில் சாதனை: 

 • புற்று நோய் குறித்த ஆராய்ச்சிக்காக இந்திய அமெரிக்கரான நவீன் வரதராஜனுக்கு 7 கோடியே 75 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது

சீனாவில் ‘ N ‘ எழுத்தை உபயோகிக்க தடை: சர்வாதிகாரியாகிறாரா ஜி ஜின்பிங்?

 • சீனாவில் ’ N ’என்ற எழுத்தை சமூக வலைதளங்களில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
 • அதிபர் ஜி ஜின்பிங்கை விமர்சிக்கும் ‘ N ‘ எழுத்துகளை தடை விதிக்கும் நோக்கில் இந்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 • N எழுத்துடன் ‘Ten thousand years’, ‘Disagree’ , Xi Zedong’ ‘Shameless’, ‘Lifelong’ , ‘Personality cult’ , ‘Emigrate , ‘Immortality’ ஆகிய வார்த்தைகளும் சீனாவில் சமூக வலைதளங்களில் உபயோகிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் மாளிகை தகவல் தொடர்பு தலைவர் ராஜினாமா

 • அமெரிக்க அதிபர் மாளிகையின் தகவல் தொடர்பு துறைத் தலைவராக பணியாற்றிய ஹோப் கிக்ஸ் (29) பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

வணிகம்

அமெரிக்காவில் இரும்பு, அலுமனியத்திற்கு இறக்குமதி வரி கடும் உயர்வு: ட்ரம்ப் அதிரடி உத்தரவு

 • அமெரிக்காவில் உள்நாட்டு தொழிலை காப்பாற்றும் நோக்கில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினயத்திற்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியை, அதிபர் ட்ரம்ப் கடுமையாக உயர்த்தியுள்ளார்

பிப்ரவரியில் முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனையில் இரட்டை இலக்க வளர்ச்சி

 • ஆட்டோமொபைல் துறையின் முன்னணி நிறுவனங்களான மாருதி சுசூகி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் போன்றவை உள்நாட்டு வாகன விற்பனையில் கடந்த பிப்ரவரியை விட இந்த பிப்ரவரியில் இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளன.

விளையாட்டு

பயிற்சி ஆட்டத்தில் கெய்ல், சாமுவேல்ஸுடன் மே.இ.தீவுகள் கடும் சொதப்பல்… ஆனாலும் வெற்றி

 • ஹராரேயில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை 2019 தகுதிச் சுற்றுப் பயிற்சி ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியிடம் 115 ரன்களுக்குச் சுருண்ட மே.இ.தீவுகள் பிறகு ஸ்பின்னர்களின் பந்து வீச்சினால் அந்த அணியை 83 ரன்களுக்குச் சுருட்டி போராடி வெற்றி பெற்றது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!