மராட்டியர்கள்

0

மராட்டியர்கள்

மராட்டியர்களின் எழுச்சி:

            பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் பல்வேறு கூறுகளின் பயனாக மராட்டியர்கள் எழுச்சி பெற்றனர். மராட்டிய தேசத்தின் புவியியல் கூறுகள் அவர்களுக்கேயுரிய ஒரு சிறப்பான குணத்தை தோற்றுவித்தன. மலைப்பாங்காள பகுதிகளும், அடர்ந்த காடுகளும் அவர்களை வீரமிக்கவர்களாகவும், கொரில்லாப்போர் முறையைப் பின்பற்றுபவர்களாகவும் உருவாக்கின. மகாராஷ்டிரத்தில் பரவிய பக்தி இயக்கம் அவர்களிடையே ஒருமித்த சமய உணர்வை ஊட்டியது துக்காராம், ராமதாஸ், வாமன் பண்டிட், ஏக்நாத் போன்ற ஆன்மீகத் தலைவர்கள் சமூக ஒற்றுமைக்கு வித்திட்டனர். சிவாஜியில் அரசியல் ஒற்றுமை ஏற்பட்டது. தக்கான சுல்தானியங்களான பீஜப்பூர், அகமது நகர் போன்ற அரசுகளின் படைத்துறையிலும், ஆட்சித் துறையிலும் மராட்டியாகள் முக்கிய பொறுப்புகளை வகித்துவந்தனர். மோரோக்கள், நிம்பால்கபுகள் போன்ற செல்வாக்கு மிகுந்த பல மராட்டிய குடும்பங்களும் இருந்தன. ஆனால், வலிமை வாய்ந்த மராட்டிய அரசை உருவாக்கிய பெருமை ஷாஜிபோன்ஸ்லே மற்றும் அவரது புதல்வர் சிவாஜி இருவரையுமே சாரும்.

சிவாஜி (1627 – 1680) : 

வாழ்க்கையும் படையெடுப்புகளும்

  • சிவாஜி 1627 ஆம் ஆண்டு ஷிவ்னேர் என்ற இடத்தில் பிறந்தார். அவரது தந்தை ஷாஜி போன்ஸ்லே. தாய் ஜீஜிபாய். 1637ல் தனது தந்தையின் ஜாகீரான பூனாவை சிவாஜி பெற்றார்.
  • 1647ல் சிவாஜியின் பாதுகாவலாரான தாதாஜி கொண்டதேவ் மறைந்த பிறகு சிவாஜி தனது ஜாகீரின் முழு ஆட்சியாளரானார். அதற்கு முன்பே, ராய்கார், கோண்டனா, தோர்னா ஆகிய இடங்களை பீஜப்பூர் ஆட்சியாளரிடமிருந்து சிவாஜி கைப்பற்றியிருந்தார்.
  • ஒரு மராட்டிய தவைரான சாந்தாராம் மோரேயிடமிருந்து ஜாவ்லி என்ற பகுதியை அவர் கைப்பற்றினார். இதனால், மாவ்லா பகுதியின் ஆட்சியாளரானார். 1657ல், சிவாஜி பீஜ்ப்பூர் அரசை தாக்கி கொங்கணப்பகுதியிலிருந்து பல கோட்டைகளைக் கைப்பற்றிக் கொண்டார்.
  • சிவாஜியை முறியடிப்பதற்காக பீஜப்பூர் சுல்தான் அப்சல்கானை அனுப்பிவைத்தார். ஆனால் 1659ல் சிவாஜி மிகவும் துணிச்சலான வகையில் அப்சல்கானை எதிர்கொண்டு தாக்கி கொலை செய்தார்.
  • சிவாஜியின் இந்த போர் வெற்றிக்குபிறகு மராட்டிய பகுதி மக்கள் அவரை ஒரு மாவீரனாக போற்றத் தொடங்கினர். அவரது படையில் சேர்ந்து பணியாற்றவும் பலர் முன்வந்தனர்.
  • சிவாஜி தலைமையில் மராட்டியர் எழுச்சி பெற்றுவருவதை முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் அச்சதுடனேயே கவனித்து வந்தார். அவர் தக்காண ஆளுநராக இருந்த ஷெயிஷ்டாகான் என்பவரை சிவாஜிக்கெதிராக அனுப்பிவைத்தார்.
  • முகலாயப் படைகளால் தோற்கடிக்கப்பட்ட சிவாஜி மீண்டும் ஒரு முறை துணிச்சலாக செயல்பட்டு ஷெயிஷ்டகானின் பூனா ராணுவ முகாம்மீது அதிரடித்தாக்குதலை நடத்தி அரசரது மகனைக் கொன்றதுடன் அவரையும் காயப்படுத்தினார்.
  • சிவாஜியின் இந்த துணிச்சல் நடவடிக்கையால் ஷெயிஷ்ட்கானின் புகழுக்கு இழுக்கு ஏற்பட்டது. அவுரங்கசீப் அவரை திரும்ப அழைத்துக் கொண்டார். 1664 சிவாஜி, முகலாயரின் முக்கிய துறைமுகமான சூரத் துறைமுகத்தைத் தாக்கி அதைச் சூறையாடினார்.
  • இம்முறை அவுரங்கசீப் சிவாஜிக்கு எதிராக ஆம்பர் நாட்டு ராஜா ஜெய்சிங்கை அனுப்பிவைத்தார். ஜெய்சிங் படைகளை நன்கு தயார் செய்து கொண்டு சிவாஜியின் குடும்பமும், கருவூலமும் இருந்த புரந்தர் கோட்டையை முற்றுகையிட்டார்.
  • வேறு வழியில்லாத நிலையில், சிவாஜி, ஜெய்சிங்குடன் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டார். 1665 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே புரந்தர் உடன்படிக்கை கையெழுத்தாகியது. அவ்வுடன் படிக்கைப்படி, சிவாஜி தம்மிடமிருந்த 35 கோட்டைகளில் 23 கோட்டைகளை முகலாயரிடம் ஒப்படைத்தார்.
  • முகலாயப் பேரரசுக்கு விசுவாசமாக இருக்கலும், சேவையாற்றவும் வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் எஞ்சியிருந்த 12 கோட்டைகள் சிவாஜியிடமே விடப்பட்டன.
  • பீஜப்பூர் அரசுக்குச் சொந்தமான ஒரு சில பகுதிகளை வைத்திருக்கும் உரிமை சிவாஜிக்கு அளிக்கப்பட்டது. முகலாயருக்கு தாமே நேரடியாக சேவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை விலக்குமாறு சிவாஜி கேட்டுக் கொண்டதால், அவரது சிறுவயது மகனான ஷாம்பாஜிக்கு மன்சப் 5000 என்ற தகுதிநிலை வழங்கப்பட்டது.
  • 1666 ல் சிவாஜி ஆக்ராவுக்கு சென்றபோது, முகலாயரால் சிறைப்பிடிக்கப்பட்டார். ஆனால், சிறையிலிருந்து தந்திரமாக தப்பிய சிவாஜி அடுத்த நான்கு ஆண்டுகளில் தனது படைகளை வலிமைப்படுத்திக் கொண்டார்.
  • பின்னர், முகலாயருக்கெதிரான போரை மீண்டும் தொடங்கினார். 1670ல் சூரத் துறைமுகம் மீண்டும் சிவாஜியால் சூரையாடப்பட்டது. தனது படையெடுப்புகள் மூலம் இழந்த பகுதிகளையெல்லாம் சிவாஜி மீட்டார்.
  • 1674ல் ராய்காரில் சிவாஜி முடிசூட்டிக் கொண்டதுடன் சத்திரபதி என்ற பட்டத்தையும் சூட்டிக்கொண்டார். பின்னர், அவர் கர்னாடகப்பகுதியின் மீது படையெடுத்து செஞ்சி, வேலூர் ஆகியவற்றைக் கைப்பற்றினார். வெற்றிபெற்றுத் திரும்பிய சிவாஜி 1680ல் மறைந்தார்.
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

சிவாஜியின் ஆட்சி முறை:

  • சிவாஜி ஒரு சிறந்த ஆட்சியாளராகவும் திகழ்ந்தார். ஒரு சிறந்த ஆட்சியமைப்புக்கு அவர் அடிகோலினார். அரசாங்கத்தின் மையமாக அரசர் செயல்பட்டார். அரசருக்கு உதவியாக எட்டு அமைச்சர்கள் கொண்ட அஷ்டபிரதான் என்ற அமைச்சரவை இருந்தது. இருப்பினும் ஒவ்வொரு அமைச்சரும் சிவாஜிக்கே நேரடியாக பொறுப்பு வாய்ந்தவர்களாக இருந்தனர்.
  1. பேஷ்வா – நிதி மற்றும் பொது நிர்வாகம். பின்னர், பேஷ்வா பிரதம அமைச்சராகவும் செயல்பட்டார்
  2. சார் – இ – நோபத் அல்லது சேனாதிபதி – படைத் தளபதி கௌரவப்பதவி
  3. அமத்தியர் – கணக்கு மேலாளர்
  4. வாக்நவின் – உளவுத் துறை, அஞ்சல் மற்றும் அரண்மனை நிர்வாகம்
  5. சச்சீவ் – தகவல் தொடர்பு
  6. அமந்தா – சடங்குகள்
  7. நியாயதீஷ் – நீதித்துறை
  8. பண்டிதராவ் – அறக்கொடை மற்றும் சமய நிர்வாகம்
  • சிவாஜி மேற்கொண்ட பெரும்பாலான ஆட்சித்துறை சீர்த்திருத்தங்கள் தக்காண சுல்தானியத்தில் பின்பற்றப்பட்டுவந்த நடைமுறைகளையே அடிப்படையாகக் கொண்டிருந்தன. எடுத்துக் காட்டாக பேஷ்வா என்பது பாரசீகத்து பட்டமாகும்.
  • சிவாஜியின் நிலவருவாய்முறை அகமது நகரில் மாலிக் ஆம்பர் புகுத்திய நடைமுறையை ஒட்டியே இருந்தது. காதி என்ற அளவுகோலைப் பயன்படுத்தி நிலங்கள் அளக்கப்பட்டன.
  • தோட்ட நிலங்கள், மலைப்பாங்கான நிலங்கள் என நிலங்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டன. ஏற்கனவே நிர்வாக அமைப்பிலிருந்த தேஷ்முக்குகள், குல்கர்னிகள் ஆகிய அதிகாரிகளின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. கர்கூன்கள் என்று அழைக்கப்பட்ட தனது வருவாய்த்துறை அதிகாரிகளை அவர் நியமித்தார்.
  • சௌத் மற்றும் சர்தேஷ்முகி என்ற வரிகள்; மராட்டிய நாட்டில் வசூலிக்கப்படவில்லை. அவை, முகலாயருக்கு மற்றும் தக்காண சுல்தானியங்களுக்குட்பட்ட அண்மைப்பகுதிகளில் வசூலிக்கப்பட்டவரிகளாகும்.
  • மராட்டியப் படையெடுப்புகளிலிருந்து தங்களைக் காபாற்றிக் கொள்வதற்காக நிலவரியின் நான்கில் ஒரு பகுதியை சொத்து வரியாக அப்பகுதிமக்கள் செலுத்தினர்.
  • மராட்டியர்கள் தங்கள் பரம்பரை உரிமைக்குட்பட்ட இடங்களாகக் கருதிய பகுதிகளில் வாழ்ந்த மக்கள் செலுத்திய நிலவரியின் பத்து சதவிகித கூடுதல் வரியே சர்தேஷ்முகி ஆகும்.
  • சிவாஜி படைத்துறை நிர்வாகத்தில் மேதமை பெற்றுத்திகழ்ந்தார். அவரது படைகள் நன்கு சீரமைக்கப்பட்டிருந்தன. அவரது நிலையான படையில் 30,000 முதல் 40,000 வரையிலான குதிரை வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
  • குதிரைப்படை ஹவில்தார்களின் மேற்பார்வையில் இருந்தது. வீரர்களுக்கு நிலையான ஊதியம் வழங்கப்பட்டது. மராட்டிக் குதிரைப்படையில் இரண்டு பிரிவுகள் இருந்தன.

1.பர்கிர்கள் – அரசின் மேற்பார்வையில் நேரடியாக பராமரிக்கப்பட்டது.

2.சிலாதார்கள் – உயர்குடியினரின் பராமரிப்பில் இருந்தவை.

  • காலாட்படையில் மாவ்லா காலாட்படைவீரர்கள் முக்கிய பங்கு வகித்தனர். சிவாஜி ஒரு கப்பற்படையும் வைத்திருந்தார்.
  • மராட்டியரின் ராணுவ நடவடிக்கைகளில் கோட்டைகள் முக்கிய பங்காற்றின. சிவாஜி ஆட்சிக் காலத்தின் இறுதியில் சுமார் 240 கோட்டைகளை அவர் பெற்றிருந்தார்.
  • ஒவ்வொரு கோட்டையும் சம தகுதி வாய்ந்த மூன்று அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் விடப்பட்டன. துரோகச் செயலை தவிர்ப்பதற்காகவே சம அதிகாரம் வழங்கப்பட்டது.
  • சிவாஜி ஒரு ஆக்க பூர்வமான மேதை, மராட்டியருக்கான ஒரு நாட்டை உருவாக்கியவர். ஜாகீர்தாராக இருந்து சத்திரபதியாக அவர் ஏற்றம் பெற்றது பிரமிக்கத்தக்கது.
  • மராட்டியரை ஒன்றிணைத்து முகலாயப் பேரரசுக்கு ஒரு பெரும் எதிரியாக அவர் விளங்கினார். அவர் ஒரு துணிச்சலான வீரர், ஆற்றல்மிகு ஆட்சியாளர்.
TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

சிவாஜியின் வழித் தோன்றல்கள்:

  • சிவாஜியின் மறைவுக்குப்பின், அவரது புதல்வர்களான ஷாம்பாஜிக்கும் ராஜாராமுக்கும் இடையே வாரிசுரிமைப்போர் நடைபெற்றது. ஷாம்பாஜி அதில் வெற்றிபெற்றார்.
  • ஆனால், பின்னர் அவர் முகலாயர்களால் சிறைப்படுத்தப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அடுத்து ராஜராம் ஆட்சிக்கு வந்தார். முகலாயரின் விரட்டுதலுக்கு அஞ்சிய அவர் செஞ்சியில் தஞ்சம்புகுந்தார்.
  • சதாராவில் அவர் மறைந்தார். அவரது மனைவி தாராபாயை அரசப்பிரதிநிதியாகக் கொண்டு மகன் இரண்டாம் சிவாஜி ஆட்சிக்கு வந்தார். அடுத்து ஆட்சிக்குப வந்தவர் ஷாகு. அவரது ஆட்சிக் காலத்தில் பேஷ்வாக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர்

பேஷ்வாக்கள் (1713 – 1818):

புலாஜி விஸ்லநாத் (1713 – 1720)

  • ஒரு சிறிய வருவாய்த்துறை அதிகாரியாக பணிக்குச் சேர்ந்த பாலாஜி விஸ்வநாத் 1713ல் பேஷ்வா பதவிக்கு படிப்படியாக முன்னேறினார். பேஷ்வா பதவியில் அவர் தனது நிலையை மேலும் வலிமைப்படுத்திக் கொண்டதோடு, அப்பதவியை வாரிசுரிமைப் பதவியாகவும் மாற்றினார்.
  • உள்நாட்டுப் போரில் முக்கிய பங்கு வகித்த அவர் இறுதியாக ஷாகுவை மராட்டிய அரசராகவும் நியமித்தார். ஷாகுவுக்கு ஆதரவாக அனைத்து மராட்டியத் தலைவர்களின் ஆதரவையும் கோரிப்பெற்றார்.
  • 1719ல், பாலாஜி விஸ்வநாத் முகலாயப் பேரரசர் பரூக்ஷியாரிடமிருந்து சில உரிமைகளையும் கோரிப் பெற்றார். முகலாயப் பேரரசர் ஷாகுவை மராட்டிய அரசராக அங்கீகரித்தார்.
  • மேலும், கர்நாடகம், மைசூர் உள்ளிட்ட தக்காணத்திலிருந்த ஆறு முகலாய மாகாணங்களிலும் சௌத். சர்தேஷ்முகி வரிகளை வசூலித்துக் கொள்ளும் உரிமையையும் பேரரசர் ஷாகுவிற்கு வழங்கினார்.

முதலாம் பாஜிராவ் (1720 – 1740):

  • பாஜிராவ், பாலாஜி விஸ்வநாத்தின் மூத்தமகன். தமது இருபதாவது வயதிலேயே தந்தை வகித்த பதவியான பேஷ்வா பதவியில் அமர்ந்தார். அவரது காலத்தில் மராட்டியர்கள் புகழ் அதன் உச்சிக்கே சென்றது.
  • மராட்டியத் தலைவர்கள் அடங்கிய கூட்டிணைவு ஒன்றை அவர் ஏற்படுத்தினார். அதன்படி ,ஒவ்வொரு மராட்டியத் தலைவரும் தமக்கு ஒதுக்கப்பட்டு ஆட்சிப் பகுதியில் தன்னாட்சி உரிமைகளைப் பெற்று ஆட்சிசெய்ய வழிவகை செய்யப்பட்டது. அதன் விளைவாக, மராட்டியத்தலைவர்கள் சிலர் புகழடந்தனர்.
  • இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளின் தங்களது ஆதிக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டனர். பரோடாவில் கெய்க் வாட், நாக்பூரின் போன்ஸ்லே, இந்தூரில் ஹோல்கர், குவாலியரில் சிந்தியா, பூனாவில் பேஷ்வா என மராட்டியத் தலைவர்கள் அந்தந்த பகுதிகளில் செல்வாக்குடன் விளங்கினர்.

பாலாஜி பாஜிராவ் (1740 – 1761):

  • தனது பத்தொன்பதாவது வயதிலேயே தந்தைக்குப்பிறகு பாலாஜி பாஜிராவ் பேஷ்வா பதவியிலமர்ந்தார்.
  • 1749ல் மராட்டிய அரசர் ஷாகு வாரிசு ஏதுமின்றி இறந்தார். வாரிசாக நியமிக்கப்பட்ட ராம்ராஜ் என்பவரை பாலாஜி பாஜிராவ் சதாராவில் சிறைவைத்தார். மராட்டிய அரசு முழுவதும் பேஷ்வாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
  • 1752ல் பேஷ்வா முகலாயப் பேரரசுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி உள்நாட்டு, அயல்நாட்டு எதிரிகளிடமிருந்து முகலாயப் பேரரசரை பாதுகாப்பதாக பேஷ்வா உறுதியளித்தார்.
  • அதற்குப்பதிலாக, வடமேற்கு மாகாணங்களில் சௌத், சர்தேஷ்முகி வரிகளையும், ஆக்ரா மற்றும் ஆஜ்மீர் பகுதிகளில் மொத்த வருவாயையும் பேஷ்வா வசூலித்துக் கொள்ள பேரரசர் அனுமதித்தார்.
  • அதனால், அகமது ஷா அப்தாலி இந்தியாவின்மீது படையெடுத்து வந்தபோது இந்தியாவை பாதுகாக்கும் பொறுப்பு மராட்டியருக்கு ஏற்பட்டது.
  • 1761 ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாம் பானிப்பட்டுப் போரில் அகமது ஷா அப்தாலியை எதிர்த்து மராட்டியர்கள் வீரத்துடன் போரிட்டனர். ஆனால், தோல்வியடைந்தனர்.
  • பல மராட்டிய தலைவர்களும், ஆயிரக்கணக்கான வீரர்களும் இப்போரில் மடிந்தனர். இந்த சோகத்தைக் கண்டு அதிச்சியடைந்த பேஷ்வா பாலாஜி பாஜிராவும் இறந்தார்.
  • மேலும், இந்த போர் மராட்டியருக்கு மரண அடியாக அமைந்தது. மராட்டிய தலைவர்களுக்கிடையே ஏற்பட்ட உட்பூசல்களினால் மராட்டியக் கூட்டிணைவிலும் விரிசல் விழுந்தது.
  • முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, மராட்டியர்கள் இந்;தியாவில் ஒரு பெரும் சக்தியாக எழுச்சி பெற்றனர். ஆனால், அவர்களால் பிரிட்டிஷ் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டதை தடுக்கமுடியவில்லை
  • மராட்டியத்தலைவர்களான ஹோல்கர், சிந்தியா, போன்ஸ்லே போன்றவர்களுக்கிடையே நிலவிய ஒற்றுமையின்மையே அவர்களது வீழ்ச்சிக்கான காரணங்களின் முதன்மையானதானும்.
  • மேலும், அவர்களது படையும், போரிடும் முறைகளும் மேம்பட்டு இருந்ததால், இறுதியில் பிரிட்டிஷாரே வெற்றி பெற்றனர்.

PDF Download

பண்டையக் கால இந்திய வரலாறு பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!