TNPSC பொது தமிழ் – மரபுக்கவிஞர்கள் பற்றிய குறிப்புகள்

2
TNPSC பொது தமிழ் – மரபுக்கவிஞர்கள் பற்றிய குறிப்புகள்

மரபுக்கவிஞர்கள் பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

மரபுக்கவிஞர்கள்
முடியரசன்

 காலம்      : 1920 – 1998

ஊர்         : பெரிய குளம் (தேனி மாவட்டம்)

இயற்பெயர் : துரைராசு

பெற்றோர்  : சுப்பராயலு சீதாலட்சுமி

பணி  : காரைக்குடியிலுள்ள மீ.சு. உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்

.இயற்றிய நூல்கள் : பூங்கொடி காவியப்பாவை வீரகாவியம் ஊன்றுகோல்(நாடகம்) முடியரசன் கவிதைகள் சுவரும் சுண்ணாம்பும் பாடும் குயில்

சிறப்பு : பாரதிதாசன் பரம்பரைக் கவிஞருள் மூத்தவர் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா ஆகியோரிடம் நெருங்கிப் பழகியவர்.

கவியரசு’ பட்டம் – குன்றக்குடி அடிகளாரால் பிறம்பு மலையில் நடந்த விழாவில் வழங்கப்பெற்றது.

‘பூங்கொடி’ என்னும் காவியத்திற்காக 1966-ல் தமிழக அரசின் பரிசைப் பெற்றார்.

திராவிட இயக்கக் கவிஞர்

அறிஞர் அண்ணா அவர்கள் கவிஞர் முடியரசனை “தமிழ்நாட்டின் வானம்பாடி” எனப்புகழ்ந்துள்ளார்.

  • 1987 – பாவேந்தர் விருது
  • 1988 – கலைஞர் விருதுப்பெற்றார்
  • 1993 – அரசர் முத்தையாவேள் அவர்களின் நினைவுப் பரிசு
  • 1998 – கலைமாமணி விருது

மேற்க்கோள்

காசுக்கு பாடுபவன் கவிஞன் அல்லன்” என்று பாடியவர்

“மீசைக்கும் கூழுக்கும் ஆசைப்பட்டு மேல்விழுந்து பாடுபவன் கவிஞன் அல்லன்

மொழி காக்கும் வரம் பில்லையேல்

எம்மொழியும் அழிந்து போகும்.”

தேசத்தைத் தன்னினத்தைத் தாழ்த்தி விட்டுத்

தேட்டையிடப் பாடுபவன் கவிஞன் அல்லன்

ஆட்சிக்கு அஞ்சாமல் யாவரேனும்

ஆள்க எனத் துஞ்சாமல் தனது நாட்டின் பாடுபடுவன் கவிஞன் ஆவன்

வாணிதாசன்

 காலம்      : 1915 – 1974

ஊர்         : வில்லியனூர் (புதுவை)

இயற்பெயர்  : அரங்கசாமி என்ற எத்திராசலு

சிறப்பு : “கவிஞரேறு” “பாவலர் மணி” பட்டங்கள் புதுமைக்கவிஞர்

‘தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்’ எனப் புகழப்படுகிறார்.

பிரெஞ்சு குடியரசுத்தலைவர் இவர்க்கு “செவாலியர்” என்ற விருதினை வழங்கினார்.

1979 – பாவேந்தர் விருதுப் பெற்றார்.

பணி : தமிழாசிரியர்

இயற்றிய நூல்கள்

  • தமிழச்சி
  • கொடிமுல்லை
  • தொடு வானம்
  • எழிலோவியம்
  • குழந்தை இலக்கியம்
  • சிரித்த நுணா
  • இரவு வரவில்லை
  • பாட்டு பிறக்குமடா
  • எழில் விருத்தம்

பிற நூல்கள் 

  • இன்ப இலக்கியம் பொங்கல் பரிசு தீர்த்த யாத்திரை பாட்டரங்கப்பாடல்கள் இனிக்கும் பாட்டு
  • புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் மாணவர்
சுரதா

 காலம்      : 1921 – 2006

ஊர்         : பழையனூர் (நாகை மாவட்டம்)

இயற்பெயர் : இராசகோபாலன்

பெற்றோர்  : திருவேங்கடன் – செண்பகம்

சிறப்புப்பெயர் : உவமைக் கவிஞர் கவிஞர் திலகம் தன்மானக் கவிஞர்

கண்ணதாசன் தமிழ்நாடு அரசின் ‘அரசவைக் கவிஞராக’ இருந்தவர். (1978 அரசவைக் கவிஞராகப் பொறுப்பேற்றார்.)

மேற்க்கோள்

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை

எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை

 வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

வாசல் தோறும் வேதனை இருக்கும்

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்

இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.

ஆடையின்றி பிறந்தோம் ஆசையின்றி பிறந்தோமா

போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் – இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்

உலகம் உன்னிடம் மயங்கும் – நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்

காலை மணியோசை; களத்துமணி நெல்லோசை வாழை இலையோசை; வஞ்சியர்கை வளையோசை தாழை மடலோசை; தாயர்தயிர் மத்தோசை கோழிக் குரலோசை; குழவியர்வாய்த் தேனோசை

செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசை தொடுப்பேன் – வண்ணச் சந்தத்திலே கவிதை சரம் தொடுப்பேன்

எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரை அமைதி இருக்கும்.”

பசுமை நிறைந்த நினைவுகளே! பாடித்திரிந்த பறவைகளே

உடுமலை நாராயண கவி

காலம்      : 1899 – 1981

ஊர்         : பூவிளைவாடி (கோயம்புத்தூர்  மாவட்டம்)

இயற்பெயர் : நாராயணசாமி

பெற்றோர்  : கிருஷ்ணசாமி – செட்டியார் முத்தம்மாள்

சிறப்புப்பெயர் : பகுத்தறிவுக் கவிராயர் கவிவாணர்

சிறப்புகள்  : “கலைமாமணி” பட்டம் தனது

திரையிசை பாடல்களுக்காக வழங்கியது இந்திய அஞ்சல் துறை 2008ம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிட்டது.

பாடல் எழுதிய திரைப்படங்கள் 

  • ஆதிபராசக்தி
  • பராசக்தி
  • தெய்வப்பிறவி
  • மாங்கல்ய பாக்கியம்
  • ஓர் இரவு
  • வேலைக்காரி
  • சித்தி
  • எங்கள் வீட்டு மகாலெட்சுமி
  • சொர்க்க வாசல்
  • தூக்குத் தூக்கி
  • இரத்தக் கண்ணீர்
  • நல்ல தம்பி
  • மனோகரா
  • பிரபாவதி

இவர் தமிழக திரைப்பாடல் ஆசிரியரும் நாடக எழுத்தாளரும் ஆவார்.

நாட்டுப்புறக் கலையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். (ஒயில் கும்மி தப்பாட்டம் புரவியாட்டம் சிக்குமேளம் புரவியாட்டம்)

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

 காலம்      : 1930 – 1959

ஊர்         : செங்கப்படுத்தான் காடு (தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ளது)

சிறப்புப்பெயர்கள் : மக்கள் கவிஞர்

இயற்பெயர் : கல்யாண சுந்தரம்

பெற்றோர் : அருணாச்சலம்

பிள்ளை – விசாலாட்சி

மனைவி : கௌரவம்மாள்

கவிதை வெளியீடு – ஜனசக்தி பத்திரிக்கை

முதல் பாடல் – ‘படித்த பெண்’ திரைப்படம் (நல்லதைச் சொன்னா நாத்திகனா பாடல்)பாரதிதாசனால் “எனது வலது கை” என்று புகழப்பட்டவர். 17 வகையானத் தொழில்களில் ஈடுபட்டு கவிஞராக உருவானவர்.

கம்யூனிஸ்ட் ஆர்வம்.

பாடல்கள்

 தூங்காதே தம்பி தூங்காதே – நீ….?

தேனாறு பாயுது! செங்கதிரும் சாயுது – ஆனாலும் மக்கள் வயிறு காயுது

திருடாதே பாப்பா திருடாதே

மானைத்தேடி மச்சான் வரப்போறான்

ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே – மனிதன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே காடு வெளஞ்சென்ன மச்சான் – நமக்குக் கையுங்  காலுந்தானே மிச்சம் கொடுத்தவனே எடுத்துக் கொண்டாண்டி செய்யும் தொழிலே தெய்வம் – அந்தத் திறமைதான் நமது – செல்வம்

மருத காசி

 காலம்            : 1920 – 1989

ஊர்         : மேலக்குடி காடு (திருச்சி மாவட்டம்)

சிறப்புப் பெயர்     : திரைக்கவித் திலகம்

பெற்றோர்  : அய்யம்பெருமாள் மிளகாயி அம்மாள்

முதல் பாடல்      : மாயாவதி திரைப்படம்

விருது            : கலைமாமணி (1968)

தமிழக அரசு பரிசு : “மருதமலை மாமணியே முருகையா” பாடலுக்காக வழங்கியது

மேற்க்கோள்

  • முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போல (உத்தமபுத்திரன்)
  • கடவுள் என்னும் முதலாளி (விவசாயி)
  • மணப்பாறை மாடுகட்டி (மக்களைப் பெற்ற மகராசி)
  • ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை (பிள்ளைக் கனியமுது)
  • சத்தியமே லட்சியமாய் கொள்ளடா (நீலமலைத் திருடன்)

பரலி.சு.நெல்லையப்பர்

மரபுக்கவிஞர்கள் பற்றிய குறிப்புகள் PDF DOWNLOAD
மரபு கவிஞர்கள் மற்றும் அவர்களின் படைப்புகளின் தொகுப்பு

TNPSC Group 2 பாடக்குறிப்புகள் PDF Download

TNPSC Group 2 நடப்பு நிகழ்வுகள் PDF Download

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

 

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!