பல்கலைக்கழக உதவி பேராசிரியர் & கணினி நிரலாளர் பணிகள் – ஜனவரி 22 நேர்முக தேர்வு!!

0
பல்கலைக்கழக உதவி பேராசிரியர் & கணினி நிரலாளர் பணிகள் - ஜனவரி 22 நேர்முக தேர்வு!!
பல்கலைக்கழக உதவி பேராசிரியர் & கணினி நிரலாளர் பணிகள் - ஜனவரி 22 நேர்முக தேர்வு!!
பல்கலைக்கழக உதவி பேராசிரியர் & கணினி நிரலாளர் பணிகள் – ஜனவரி 22 நேர்முக தேர்வு!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தற்காலிக உதவி பேராசிரியர் மற்றும் கணினி நிரலாளர் பணியிடங்களுக்கு நாளை (ஜனவரி 22) நேர்முக தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நேர்முக தேர்வு:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நீண்ட நாட்களாக மூடப்பட்டு இருந்த கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் டிசம்பர் மாதத்தில் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. மேலும் முதல் மற்றும் 2ம் ஆண்டு மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதனை அடுத்து பல்கலைக்கழகங்கள் காலியாக உள்ள உதவி பேராசிரியர் மற்றும் பிற பணிகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2021 – மாநில அரசு வெளியீடு!!

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொலைநெறி தொடர்கல்வி இயக்க ‘உளவியல்’ பிரிவிற்கு தற்காலிக உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு நாளை மதியம் 12 மணி அளவில் பல்கலை வளாகத்தில் நேர்முக தேர்வு நடைபெற உள்ளது. இதில் நெட், செட் தேர்வுகள் தேர்ச்சி பெற்ற பிஎச்.டி முடித்த பேராசிரியர்கள் பங்கு பெறலாம். அசல், நகல் சான்றிதழ்கள் மற்றும் சுய விவரக்குறிப்பு உள்ளிட்டவற்றை கொண்டு வருதல் அவசியம்.

மினி கிளினிக்குகளில் 1,415 செவிலியர் & 585 உதவியாளர் பணியிடங்கள் – ஐகோர்ட் கிளை அதிரடி தீர்ப்பு!!

அதுமட்டுமின்றி பல்கலைக்கழக தற்காலிக கணினி நிரலாளர் பணிக்கு தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு காலை 10.30 மணி அளவில் நேர்காணல் தேர்வு நடைபெற உள்ளது. இதில் எம்.சி.ஏ., எம்.எஸ்., பி.இ., போன்ற பட்டப்படிப்புகள் கணினியியல் அல்லது கணினி அறிவியல் பிரிவில் முடித்திருக்க வேண்டும். முதுநிலை கணிதவியல் மற்றும் கணினி பயன்பாடுகளில் முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்களும் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!