விஜய் டிவி ‘குக் வித் கோமாளி 3’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

0
விஜய் டிவி 'குக் வித் கோமாளி 3' நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் - உற்சாகத்தில் ரசிகர்கள்!
விஜய் டிவி 'குக் வித் கோமாளி 3' நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் - உற்சாகத்தில் ரசிகர்கள்!
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி 3’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 3 மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி 3:

ஒரு நிகழ்ச்சி தொடங்கி அது வெற்றிகரமாகவும், மக்களிடம் அதிக வரவேற்பையும் பெற்றால் மட்டுமே அந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த சீசன்கள் தொடங்கப்படும். அந்த வகையில் சீசன்களாக நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துவதை விஜய் டிவி தான் கொண்டு வந்தது. சூப்பர் சிங்கர், ஜோடி, தொடங்கி தற்போது சீரியல்களையும் பல சீசன்களாக வருகின்றன. அந்த வகையில் கடந்த 2020 ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து 2 சீசன்களை முடித்த வெற்றி பெற்ற நிகழ்ச்சியான குக் வித் கோமாளி 3 தற்போது தொடங்க இருக்கிறது.

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் களமிறங்கும் ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி? ப்ரோமோ வெளியீடு!

முதல் சீசனில் வனிதா விஜயகுமார் மற்றும் 2ம் சீசனில் கனி இவர்கள் தான் வெற்றிக் கோப்பையை பெற்றவர்கள். ஆனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குக்குகள் முதல் கோமாளிகள் வரை அனைவரும் மக்கள் மனதில் நின்று வெற்றி பெற்றுள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்த சீசன் ஷூட்டிங் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் டிவியில் காணலாம் என்றும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் நிகழ்ச்சி குறித்த ஆர்வம் மக்களிடம் அதிகரித்துள்ளது.

‘ராஜா ராணி 2’ சந்தியாவாக சவால்களை சந்திக்கும் செம்பருத்தி ஷபானா? அதிரடி ப்ரோமோ ரிலீஸ்!

அதன்படி திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் மனோபாலா, சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப், தமிழ் சினிமாவில் பிரபல பாடகர்களான கிரேஸ் கருணாஸ் மற்றும் அந்தோணி தாசன் ஆகியோர் குக்குகளாக களம் இறங்க உள்ளனர். மேலும், கோமாளிகளாக கலக்கப்போவது யாரு சீசன் 5 டைட்டில் வின்னர் குரேஷி, சூப்பர் சிங்கர் சீசன் 7 டைட்டில் வின்னர் மூக்குத்தி முருகன் மற்றும் சூப்பர் சிங்கர் பரத் போன்றவர்கள் புதிதாக கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!