பாஜக உறுப்பினர் பொறுப்பு ராஜினாமா – மணிப்பூர் ஆளுநர் இல கணேசன் கையெழுத்து!

0
பாஜக உறுப்பினர் பொறுப்பு ராஜினாமா - மணிப்பூர் ஆளுநர் இல கணேசன் கையெழுத்து!
பாஜக உறுப்பினர் பொறுப்பு ராஜினாமா - மணிப்பூர் ஆளுநர் இல கணேசன் கையெழுத்து!
பாஜக உறுப்பினர் பொறுப்பு ராஜினாமா – மணிப்பூர் ஆளுநர் இல கணேசன் கையெழுத்து!

மணிப்பூரின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இல கணேசன் அவர்கள் தமிழக பாஜக தேசிய குழு உறுப்பினர், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளை ராஜினாமா செய்தார்.

மணிப்பூர் ஆளுநர்:

பாரதிய ஜனதா கட்சியிலும், ஆட்சியிலும் புது ரத்தம் பாய்ச்சும் வகையில் உயர் பொறுப்புகள் மற்றும் பதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது தமிழக மாநில தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பதவியில் அமர வைக்கப்பட்டார். இதனை அடுத்து தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டார். இதோடு மட்டுமல்லாமல் பாஜக -வில் ஒரு நபருக்கு ஒரு பதவி என்ற கொள்கை இருந்து வருவதால் எல்.முருகன் ராஜினாமா செய்து, அந்த பதவிக்கு அண்ணாமலை வந்திருப்பது குறிப்பிடத் தகுந்தது.

புதுச்சேரி அரசின் 2021ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கை – ஆகஸ்ட் 26 ஆம் தேதி தாக்கல்!

இதனை அடுத்து பாஜக ஆளும் மத்திய அரசாங்கத்திலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு சில புதிய இளம் தலைமுறைக்கு பதவி வழங்கப்பட்டது. இதனால் பல புதிய இளம் உறுப்பினர்கள் கட்சியின் மேலிட பொறுப்புக்கு வந்ததை அடுத்து கட்சி வலுவடைந்து இருப்பதாக மேலிடம் பெருமிதம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது மணிப்பூரின் புதிய ஆளுநராக இல.கணேசன் குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்டார்.

TN Job “FB  Group” Join Now

மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யான இல.கணேசன், இதற்கு முன் பாஜகவில் தேசிய குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவரான இவர் தமிழக பாஜக தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் அறிக்கையை அடுத்து பாஜகவின் கொள்கை படி தனது இதர பொறுப்புகளை ராஜினாமா செய்து கையெழுத்திட்டு உள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!