தனது மகன் துருவனுடன் வீடியோ வெளியிட்ட மைனா நந்தினி – ரசிகர்கள் வாழ்த்து மழை!

0
தனது மகன் துருவனுடன் வீடியோ வெளியிட்ட மைனா நந்தினி - ரசிகர்கள் வாழ்த்து மழை!
தனது மகன் துருவனுடன் வீடியோ வெளியிட்ட மைனா நந்தினி - ரசிகர்கள் வாழ்த்து மழை!
தனது மகன் துருவனுடன் வீடியோ வெளியிட்ட மைனா நந்தினி – ரசிகர்கள் வாழ்த்து மழை!

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் மைனா நந்தினி. இவருடைய மகன் துருவன் காரில் நடனம் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மைனா நந்தினி:

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்ற கதாபாத்திரம் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நந்தினி. மதுரையை சேர்ந்த இவர் சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தார். முதலில் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டு பின் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் திடீரென அவரது கணவர் தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் யோகேஷ் என்பவரை திருமணம் செய்து சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். அவருக்கு துருவன் என்ற மகன் இருக்கிறார். தனியாக யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வரும் அவர் பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி’ முதல் சன் டிவி ‘ரோஜா’ வரை – சீரியல்களில் டாப் கமெண்ட்ஸ்!

அவரது கணவருடன் அவர் செய்யும் நகைச்சுவை வீடியோக்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்நிலையில் மைனா தன்னுடைய மகன் புகைப்படத்தை அவனுடைய முதல் பிறந்தநாள் அன்று வெளியிட்டிருந்தார். மேலும் பல பிரபலங்கள் கலந்து கொள்ள சிறப்பாக அவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதன் பின் துருவன் செய்யும் சேட்டைகளை அவர் வீடியோவாக பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் துருவனின் சேட்டை குறித்த புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம், முல்லையுடன் இணைந்த பாக்கியா – புது சங்கமம்? ரசிகர்கள் உற்சாகம்!

அதில் காரில் துருவன் நந்தினியுடன் சென்று கொண்டிருக்க, அப்போது பாடல் ஒன்று ஒலிக்கப்படுகிறது அதற்கு துருவன் மிகவும் அழகாக நடனம் ஆடி வருகிறார். அந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் அம்மா அப்பாவிற்கு தப்பாமல் பிள்ளை இருக்கிறது என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் தற்போது மைனா நந்தினி மற்றும் அவரது கணவர் Mr and Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அரையிறுதி வரை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!