ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு மனம் திறந்து பதில் அளித்த மணிமேகலை – வைரலாகும் பதிவு!

0
ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு மனம் திறந்து பதில் அளித்த மணிமேகலை - வைரலாகும் பதிவு!
ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு மனம் திறந்து பதில் அளித்த மணிமேகலை - வைரலாகும் பதிவு!
ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு மனம் திறந்து பதில் அளித்த மணிமேகலை – வைரலாகும் பதிவு!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் அதிக அளவில் பிரபலமான மணிமேகலை தற்போது தனது ரசிகர்களுடன் இன்ஸ்டா பக்கத்தில் கேள்வி, பதில் மூலமாக உரையாடியுள்ளார். அதில் அவரது பதில்கள் அனைத்தும் வியக்கும் வகையில் உள்ளது.

விஜே மணிமேகலை:

சின்னத்திரையில் பலரும் தங்களது திறமையை நிரூபிக்க பல ஆண்டுகள் போராட வேண்டியது இருக்கும். தங்களை முடக்க வரும் அதனை தடைகளையும் கடந்து மக்கள் மத்தியில் அசைக்க முடியாத அளவிற்கு பேரையும், புகழையும் பெறுவது மிகவும் சாதனையான விஷயமாக தான் உள்ளது. மற்றவர்களின் நெகட்டிவ் விமர்சனங்களை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல், அவ்வாறு கூறியவர்களையும் தற்போது திரும்பி பார்க்க வைத்துள்ளவர் தான் மணிமேகலை.

NPS திட்டத்தின் மூலமாக ரூ.1 லட்சம் ஓய்வூதியம் பெறுவது எப்படி? முழு விவரங்களுடன்!

கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்னதாக விஜே ஆக தனது தொழில் பயணத்தை தொடங்கியுள்ள மணிமேகலை, தனது துறையில் இருந்த பல போட்டிகளையும் மீறி தனித்து தெரிந்தவர். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக தனக்கு தெரியாத சமையல் கலையின் மூலமாகவும், வெகுளியான பேச்சின் மூலமாகவும் மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்துள்ளார். மணிமேகலை தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுடன் கேள்வி பதில் மூலமாக உரையாடினார்.

Exams Daily Mobile App Download

அப்போது நீங்கள் எப்படி இவ்வளவு அழகாக இருக்கீங்க என்று கேட்ட கேள்விக்கு, தன்னை கலாய்ப்பதாக கூறியுள்ளார். நீங்க எப்போ படத்தில் நடிப்பீர்கள் என்ற கேள்விக்கு, நடிப்பதில் தனக்கு ஆர்வம் இல்லை என்றும், அது தனக்கு வராது என்றும் கூறியுள்ளார். இன்னொருவர் நீங்க எப்படி இவ்வளவு ஸ்போர்ட்டிவா எல்லா விஷயத்தையும் எடுத்துக்குறீங்க என்று கேட்டதற்கு, எப்போதுமே நாம எனது அளவு சந்தோசமா இருக்கனும் என்பதை நாம தான் முடிவு பண்ணனும், நமது மனநிலை தான் முக்கியம் என்றும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here