விஜய் டிவி VJ மணிமேகலை, ஹுசைன் திருமணம் குறித்த விமர்சனங்கள் – அவரே வெளியிட்ட பதிவு!

0
விஜய் டிவி VJ மணிமேகலை, ஹுசைன் திருமணம் குறித்த விமர்சனங்கள் - அவரே வெளியிட்ட பதிவு!
விஜய் டிவி VJ மணிமேகலை, ஹுசைன் திருமணம் குறித்த விமர்சனங்கள் - அவரே வெளியிட்ட பதிவு!
விஜய் டிவி VJ மணிமேகலை, ஹுசைன் திருமணம் குறித்த விமர்சனங்கள் – அவரே வெளியிட்ட பதிவு!

விஜய் டிவி “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு மக்கள் மனதில் பிரபலமடைந்தவர் விஜே மணிமேகலை. நேற்று அவருக்கு 4வது ஆண்டு திருமண நாள் என்பதால் இன்ஸ்டாவில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

விஜே மணிமேகலை:

சன் மியூசிக்கில் தொகுப்பாளராக தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கியவர் விஜே மணிமேகலை. அதில் பிரபலமாகி இருந்த அவர் 2017 ஆம் ஆண்டு ஹுசைன் என்பவரை காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். அவரது காதல் விவகாரம் தெரிந்து அவர் தந்தை அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் திடீரென ரெஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டார். பணக்கார வீட்டு பெண்ணான விஜே மணிமேகலை திருமணத்திற்கு பின் பல கஷ்டங்களை சந்தித்துள்ளார்.

முதன் முறையாக தனது விவாகரத்து குறித்து மனம் திறந்த ‘பிக்பாஸ்’ இசைவாணி – ரசிகர்கள் ஷாக்!

அதன் பின் அவர் விஜய் டிவியில் நடந்த Mr and Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் அவரது கணவர் ஹுசைன் உடன் கலந்து கொண்டார். மேலும் தனியாக யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வரும் அவர்களுக்கு ஏகப்பட்ட பாலோயர்ஸ் இருக்கின்றனர். இயற்கையான நகைச்சுவை குணம் கொண்ட இந்த ஜோடி போடும் வீடியோவை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் தினமும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன் பின் மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டார். அதன் மூலமாக அவரது ரசிகர் பட்டாளம் அதிகரித்தது.

குக்கர் வெடிப்பது, சுடு தண்ணீர் போடுவது என அவர் வீடியோக்கள் ட்ரெண்ட் ஆனது. வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறிய மணிமேகலை, ஹுசைன் ஜோடி நேற்று (டிச.6) தங்களது 4வது வருட திருமண நாளை கொண்டாடினார்கள். அப்போது அவர் இன்ஸ்டா பக்கத்தில் 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டேன் என பதிவிட்ட போது பலர் நெகட்டிவ் கமெண்ட் செய்தார்கள். பலர் சாபம் விட்டார்கள், மதம் மாறி திருமணம் எல்லாம் நடைமுறை வாழ்க்கைக்கு சரியாக வராது என சொன்னார்கள், ஆனால் அவர் தற்போது சமீபத்தில் கிராமத்தில் இடம் வாங்கி இருக்கிறார்.

விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” நக்ஷத்ராவிற்கு திருமணம் – நலங்கு நிகழ்ச்சி புகைப்படங்கள் வைரல்!

மேலும் BMW கார், ஹூண்டாய் கார், சில்வர் பிலே பட்டன், கோல்ட் பிலே பட்டன், Black Sheep, Behindwoods அவரது என பல வெற்றிகளை வாங்கியதை நினைத்து பெருமையாக பதிவிட்டிருக்கிறார். நான்கு ஆண்டுகள் ஆனாலும் அவர் இன்னும் மதம் மாறவில்லை. அவர் வாழ்க்கையில் முன்னேறியதை மட்டுமே லட்சியமாக கொண்டுள்ளார் என்பது அந்த பதிவில் இருந்து தெரிகிறது. இந்த வீடியோ பார்த்த பலர் நெகடிவ் கமெண்ட்ஸ்களுக்கு தக்க பதிலடி என அந்த அழகான ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here