ரூ.218,200/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !
தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனத்தில் (MANAGE) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Director, Junior Technical Assistant, Junior Technical Assistant and Multi-Tasking Staff (MTS) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | National Institute of Agricultural Extension Management (MANAGE) |
பணியின் பெயர் | Director, Junior Technical Assistant, Junior Technical Assistant and Multi-Tasking Staff (MTS) |
பணியிடங்கள் | 07 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Within 30 days |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
MANAGE பணியிடம்:
MANAGE மத்திய அரசு நிறுவனத்தில் தற்போது Director, Junior Technical Assistant, Junior Technical Assistant and Multi-Tasking Staff (MTS) பணிக்கு என்று மொத்தமாக 07 காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
MANAGE கல்வி தகுதி:
- Director பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் Master’s Degree கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.
- Upper Division Clerk (UDC) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் Bachelor degree கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.
- Junior Technical Assistant (Network Administration) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 12 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Multi-Tasking Staff (MTS) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 10 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
MANAGE வயது விவரம்:
விண்ணப்பதாரர்கள் குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 50 வயது மிகாமல் இருக்க வேண்டும்.
MANAGE ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் தேர்வாகும் பணிக்கு தகுந்தாற்போல் மாதம் குறைந்தது ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/-வரை ஊதியம் அளிக்கப்படும்.
MANAGE விண்ணப்பிக்கும் முறை:
Group – A பணிக்கு ரூ.1000/- மற்றும் Group – C பணிக்கு ரூ.300/- என்றும் விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
MANAGE தேர்வு முறை:
- Written Test.
- Skill Test.
- Interview.
MANAGE விண்ணப்பிக்கும் முறை:
இந்த ஒன்றிய அரசு பணிக்கு பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து அதை குறிப்பிட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும் வண்ணம் தபால் செய்யவும்.