மேற்கு வங்கத்தில் 3வது முறையாக முதல்வராகிறார் மம்தா – இன்று பதவி பிரமாணம்!!!

1
மேற்கு வங்கத்தில் 3வது முறையாக முதல்வராகிறார் மம்தா - இன்று பதவி பிரமாணம்!!!
மேற்கு வங்கத்தில் 3வது முறையாக முதல்வராகிறார் மம்தா - இன்று பதவி பிரமாணம்!!!
மேற்கு வங்கத்தில் 3வது முறையாக முதல்வராகிறார் மம்தா – இன்று பதவி பிரமாணம்!!!

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி இன்று மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்கிறார்.

சட்டசபை தேர்தல் வெற்றி:

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவி வந்தது. அதில், மொத்தம் உள்ள 292 தொகுதிகளில் 214 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. புதிதாக வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களால் அக்கட்சியின் சட்டமன்ற தலைவராக மம்தா பானர்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை – கல்வித்துறை உத்தரவு!!

இதனால் மேற்கு வங்கத்தின் முதல்வராக அவர் பொறுப்பேற்க உள்ளார். இருப்பினும் மம்தா அவர் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை விட குறைந்த வாக்குகளை பெற்று தோல்வி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் முதல்வராக அவர் பொறுப்பேற்பதற்கு இந்திய அரசியல் சாசனத்தில் இடம் உள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதற்கு, முதல்வராக பதவி ஏற்ற ஆறு மாதங்களுக்கு பின், அவர் ஏதேனும் ஒரு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தி அதில், வெற்றி பெற வேண்டும். மேற்கு வங்கத்தில் எப்படியும் ஆட்சியை கைப்பற்றிவிட நினைத்த பாஜக 76 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தின் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட மம்தா பானர்ஜி அவர்கள் இன்று (மே 5) காலை 10:45 மணி அளவில் மேற்கு வங்க கவர்னர் மாளிகையில் முதல்வராக பதவி பிரமாணம் ஏற்றுக் கொள்கிறார். கொரோனா அச்சம் காரணமாக பதவி ஏற்பு நிகழ்ச்சியை மிகவும் எளிமையாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here