வணிக வளாகங்கள் இரவு 8 மணிக்கு மேல் செயல்பட அனுமதி – அரசிற்கு கோரிக்கை!

0
வணிக வளாகங்கள் இரவு 8 மணிக்கு மேல் செயல்பட அனுமதி - அரசிற்கு கோரிக்கை!
வணிக வளாகங்கள் இரவு 8 மணிக்கு மேல் செயல்பட அனுமதி - அரசிற்கு கோரிக்கை!
வணிக வளாகங்கள் இரவு 8 மணிக்கு மேல் செயல்பட அனுமதி – அரசிற்கு கோரிக்கை!

கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், டெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் ஷாப்பிங் சென்டர்கள் மற்றும் மால்கள் திறக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இந்திய ஷாப்பிங் சென்டர்ஸ் அசோசியேஷன் கோரிக்கை வைத்துள்ளது.

கோரிக்கை:

கடந்த ஆண்டு டிசம்பரில், கொரோனா வைரஸின் ஓமைக்ரான் மாறுபாட்டின் பரவல் அதிக அளவில் பரவுவதை தடுக்க டெல்லி உட்பட பல மாநில அரசுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தன. டெல்லியில், மல்டிபிளக்ஸ்கள் மூடப்பட்டன, உணவகங்களில் சாப்பிடுவது தடைசெய்யப்பட்டது. இதுபோன்ற மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கொரோனா நிலைமை மற்றும் நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைவதை மதிப்பீடு செய்த பிறகு, கட்டுப்பாடுகள் அதிகாரிகளால் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட்டது. டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் பிப்ரவரி 4ம் தேதி அன்று வெளியிட்ட உத்தரவில் வணிக வளாகங்கள் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதித்தது.

தமிழக இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தற்போதைய நிலவரப்படி கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நகரங்களில் மக்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்புகளும் குறைந்து வருகின்றது. இந்நிலையில், டெல்லியில் முதல்வர் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஷாப்பிங் சென்டர்ஸ் அசோசியேஷன் சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை குறைந்து வருவதைக் காரணம் காட்டி, ஷாப்பிங் சென்டர்கள் மற்றும் மால்களில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தவும், இரவு 8 மணிக்கு மேல் மால்கள் செயல்பாடுகளை அனுமதிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

நோய் தடுப்பிற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும், அதிகாரிகள் வழங்கிய உத்தரவுகளை கடைபிடிப்பதாகவும் இந்திய ஷாப்பிங் சென்டர்ஸ் அசோசியேஷன் உறுதியளித்துள்ளது. தொடர்ந்து பலமுறை ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்த காரணத்தால் நலிவடைந்துள்ள தொழில்துறையின் மறுமலர்ச்சியின் வேகத்தை மேம்படுத்த உதவும் வகையில் இந்த கோரிக்கை வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here