ஜூலை 5க்கு பின் மால்கள் திறக்க அனுமதி? மூன்றாம் கட்ட தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு!

0
ஜூலை 5க்கு பின் மால்கள் திறக்க அனுமதி? மூன்றாம் கட்ட தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு!
ஜூலை 5க்கு பின் மால்கள் திறக்க அனுமதி? மூன்றாம் கட்ட தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு!
ஜூலை 5க்கு பின் மால்கள் திறக்க அனுமதி? மூன்றாம் கட்ட தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு!

கர்நாடக மாநிலத்தில் ஜூலை 5ம் தேதி முதல் மூன்றாம் கட்ட தளர்வுகள் அமலுக்கு வரவுள்ள நிலையில் வரும் 5ம் தேதி முதல் மாநிலத்தில் மால்கள் திறக்க வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.

ஊரடங்கு தளர்வுகள்:

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று தற்போது கட்டுக்குள் வர தொடங்கியுள்ளது, இதன் காரணமாக மாநிலத்தில் தற்போது வரை இரண்டு கட்டமாக தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் வரும் ஜூலை 5ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரவுள்ளது, இதனை தொடர்ந்து வரும் 5ம் தேதி முதல் மூன்றாம் கட்ட தளர்வுகள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் – ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

இந்நிலையில் கடந்த ஜூன் 30ம் தேதி அன்று மாநில முதல்வர் எடியூரப்பா அவர்களுடன் மால் உரிமையாளர்கள் நேரில் சந்தித்து மால்களை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு மாநில முதல்வர் சாதகமான முடிவு எடுக்கப்படும் என்று உறுதியளித்ததாக அரசு வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது. அதன்படி வரும் 5ம் தேதி முதல் மால்கள் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது, மேலும் மால் உரிமையாளர்கள் மால்கள் திறப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.

அதே நேரத்தில் மல்டிபிளக்ஸ், சினிமா ஹால்கள் உள்ளிட்டவை திறக்க கூடுதல் காலம் ஆகும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மாநில முதல்வர் எடியூரப்பா அவர்கள் நாளை (ஜூலை 3) அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இந்த கூட்டத்திற்கு பின் தளர்வுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. மேலும் இதுகுறித்து மாநில உள்துறை அமைச்சர் கூறியதாவது, மூன்றாம் கட்ட தளர்வுகளில் வார இறுதி ஊரடங்கு ரத்து செய்ய வாய்ப்புள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் இரவு நேர ஊரடங்கு நேரம் குறைக்கப்பட்டு, கடைகளின் திறப்பு நேரத்தை இரவு 10 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்று வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் மாநிலத்தில் பேருந்து, மெட்ரோ ரயில் சேவைகள் நேரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் இதுகுறித்து மாநில முதல்வர் இறுதி முடிவை எடுப்பார் என்று அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here