சபரிமலை கோவிலில் மலையாள புத்தாண்டு சிறப்பு பூஜை – நடை திறப்பு!

0
சபரிமலை கோவிலில் மலையாள புத்தாண்டு சிறப்பு பூஜை - நடை திறப்பு!
சபரிமலை கோவிலில் மலையாள புத்தாண்டு சிறப்பு பூஜை - நடை திறப்பு!
சபரிமலை கோவிலில் மலையாள புத்தாண்டு சிறப்பு பூஜை – நடை திறப்பு!

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மாத பூஜைக்கு மட்டும் நடை திறக்கப்படும். அந்த வகையில் ஆவணி மாத பூஜை மற்றும் மலையாள புத்தாண்டை முன்னிட்டு நேற்று சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன்

கேரள மாநிலத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். பொதுவாக சபரி மலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை 60 நாட்கள் மண்டல , மகர விளக்கு பூஜைகளுக்காக கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இதை தவிர ஒவ்வொரு தமிழ் மாதம் பிறக்கும் முதல் ஐந்து நாட்கள் கோவில் நடை திறக்கப்படும். இதனை தொடர்ந்து வழக்கமாக நடைபெறும் பூஜைகளும், சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

அந்த வகையில் நேற்று ஆவணி மாதம் பிறந்ததை முன்னிட்டு கோவிலின் நடை திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று மலையாள புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். இதையடுத்து கோவிலில் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் பிற பூஜைகளுடன் நெய்அபிஷேகம் நடைபெற்றது. மேலும் காலை 7.30 மணிக்கு உஷ பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தேசிய Fellowship வழங்க புதிய திட்டம் – UGC அறிவிப்பு!

இதனை தொடர்ந்து 21ம் தேதி வரை உதயாஸ்தமன பூஜை, அஷ்டாபிஷேகம், கலசாபிஷேகம், களபாபிஷேகம், படி பூஜை, புஷ்பாபிஷேகம் நடைபெறும். இதற்கு அடுத்து திருவோண பண்டிகையை முன்னிட்டு மீண்டும் வருகிற செப்டம்பர் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்பின்பு கோவில் நடை மீண்டும் அடைக்கப்படும். மேற்கண்ட நாட்களில் பக்தர்கள் வழக்கம் போல ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here