கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் – மேலும் 7 லட்சம் பேர் சேர்ப்பு.. அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மேல்முறையீடு மனுக்கள் வாயிலாக சுமார் 70 லட்சம் பேர் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.
உரிமைத்தொகை திட்டம்:
தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் 1 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு மாதம் ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தகுதியின்மை காரணமாக பலரது விண்ணப்பங்கள் நிராகரிப்பு செய்யப்பட்டது. அப்போது அரசு நிராகரிப்பு செய்த விண்ணப்பதாரர்கள் மனுவை மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பை வழங்கியது.
தமிழக 10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணைக்கு பின் தேர்தல் – தகவல் வெளியீடு!
இந்த வாய்ப்பை பயன்படுத்தி பலரும் மனுக்களை மேல் முறையீடு செய்தனர். இதன் வாயிலாக தற்போது 7 லட்சம் பேர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயன்படகூடிய குடும்ப தலைவிகளின் எண்ணிக்கை 1 கோடியே 11 லட்சத்து 60 ஆயிரமாக உயர்ந்துள்ளது எனவும் கூறினார்.