IFS பதவிகளுக்கான மெயின் தேர்வு முடிவுகள் – UPSC இணையதளத்தில் வெளியீடு!

0
IFS பதவிகளுக்கான மெயின் தேர்வு முடிவுகள் - UPSC இணையதளத்தில் வெளியீடு!
IFS பதவிகளுக்கான மெயின் தேர்வு முடிவுகள் - UPSC இணையதளத்தில் வெளியீடு!
IFS பதவிகளுக்கான மெயின் தேர்வு முடிவுகள் – UPSC இணையதளத்தில் வெளியீடு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்திய ஐஎப்எஸ் பதவிகளுக்கான மெயின் தேர்வு முடிவுகள் நேற்று (ஜூன் 16) வெளியிடப்பட்டுள்ளது.

மெயின் தேர்வு முடிவுகள்:

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் மற்றும் ஐஎப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது. கடந்த ஆண்டு சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 796 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 12ம் தேதி அறிவித்தது. அதில் ஐஎப்எஸ் பதவிகளுக்கான 90 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் மின் கணக்கீடு பணிகள் தொடக்கம் – ஜூன் 15 உடன் சலுகைகள் முடிவு!

இதற்கான தேர்வுகள் கடந்த ஆண்டு நடைபெற இருந்த நிலையில் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு கடந்த பிப்ரவரி 28 முதல் மார்ச் 7 வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான முடிவுகள் யு.பி.எஸ்.சி அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் www.upsc.gov.in என்ற இணையதளம் மூலமாக தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

மத்திய குடிமைப் பணி தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட இந்த தேர்வானது, இந்திய வனப்பணிக்கான தேர்வாகும். இந்த பணிகளுக்கான மெயின் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதில் இந்திய அளவில் 225 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து 18 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மெயின் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தங்களின் நேர்முக தேர்வுக்கான விண்ணப்பத்தை ஜூலை 7ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த பணிக்கான நேர்முக தேர்வு டெல்லியில் நடைபெறும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!