9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி – மாநில அரசு அறிவிப்பு!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தாக்கம் காரணமாக 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வின்றி தேர்ச்சி:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு உச்சம் பெற்று வருகிறது. இதனை சரி செய்யும் நோக்கில் அம்மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கும் சனி, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 1,15,000யை கடந்துள்ளது. அதில் 80% சதவிகிதம் பேர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடதப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 7) 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிஎஸ்இ செய்முறை தேர்வுகள் – நாளை முதல் தொடக்கம்!!
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி தேர்வுகள் நேரடியாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்கள் சிலர் ஆன்லைன் மூலமாக இந்த தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த தேர்வுக்கான தேதிகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
For
Online Test Series கிளிக் செய்யவும்
To Join
Whatsapp கிளிக் செய்யவும்
To Join
Facebook கிளிக் செய்யவும்
To Join
Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe
Youtube Channel கிளிக் செய்யவும்




