இன்று முதல் 18 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகள் – மாநில அரசு அறிவிப்பு!!

0
இன்று முதல் 18 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகள் - மாநில அரசு அறிவிப்பு!!
இன்று முதல் 18 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகள் - மாநில அரசு அறிவிப்பு!!
இன்று முதல் 18 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகள் – மாநில அரசு அறிவிப்பு!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் 5 கட்டங்களாக ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 18 மாவட்டங்களுக்கு இன்று முதல் முழுமையான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வுகள்:

மஹாராஷ்டிரா மாநிலத்தில் புதன்கிழமை நிலவரப்படி, 15,169 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு தொற்று பதித்தவர்கள் எண்ணிக்கை 57,76,184 ஆக உயர்ந்துள்ளது. தொற்றினால் 285 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 96,751 ஆக மொத்த மொத்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது. தற்போது மாநிலத்தில் 2,16,016 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

மும்பை நகரில் மட்டும் புதிதாக 923 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 7,07,041 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 31 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இதுவரை தொற்று பாதிப்பினால் 14,880 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலத்தில் பாதிப்புகள் குறைந்து வருவதால் அங்கு 5 கட்டங்களாக ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.

ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு – ஊழல் தடுப்பு ஆணையம் உத்தரவு!!

அதன்படி, மொத்தம் உள்ள 36 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு விகிதம் கணிசமாக குறைந்து விட்ட அவுரங்காபாத், பண்டாரா, புல்தானா, சந்திரபூர், துலே, கட்சிரோலி, கோண்டியா, ஜல்கான், ஜல்னா, லாதூர், நாக்பூர், நந்தேடு, நாசிக், யவத்மால், வாஷிம், வர்தா, பர்பானி மற்றும் தானே ஆகிய 18 மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுவதுமாக இன்று முதல் நீக்கப்படுவதாக முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் விநியோகம் – தொடக்க கல்வி இயக்குனர்!!

மாநிலத்தின் தலைநகரான மும்பை நகரம் 2ம் கட்டத்தில் உள்ளது. அங்கு ஓரளவில் மட்டுமே தளர்வுகள் அளிக்கப்படும். இருப்பினும், உள்ளூர் ரயில்கள் சேவை தடை செய்யப்பட்ட நிலையில் தான் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களில் நேர்மறை விகிதம் மற்றும் ஆக்ஸிஜன் படுக்கைகள் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலத்திற்கு 5 கட்ட தளர்வுகள் திட்டத்தை முடிவு செய்துள்ளதாக மகாராஷ்டிரா அமைச்சர் விஜய் வதேட்டிவார் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!