மண்டபத்தில் இருந்து கடத்தப்பட்ட பெண், வெற்றிக்கு காத்திருந்த அதிர்ச்சி – மெகா சங்கமம் ப்ரோமோ ! ரசிகர்கள் ஷாக்!

0
மண்டபத்தில் இருந்து கடத்தப்பட்ட பெண், வெற்றிக்கு காத்திருந்த அதிர்ச்சி - மெகா சங்கமம் ப்ரோமோ ! ரசிகர்கள் ஷாக்!
மண்டபத்தில் இருந்து கடத்தப்பட்ட பெண், வெற்றிக்கு காத்திருந்த அதிர்ச்சி - மெகா சங்கமம் ப்ரோமோ ! ரசிகர்கள் ஷாக்!
மண்டபத்தில் இருந்து கடத்தப்பட்ட பெண், வெற்றிக்கு காத்திருந்த அதிர்ச்சி – மெகா சங்கமம் ப்ரோமோ ! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியில் “நம்ம வீட்டு பொண்ணு” மற்றும் “தென்றல் வந்து என்னை தொட” சீரியல் மெகா சங்கமம் ஒளிபரப்பாகி வருகிறது. அது குறித்த புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

மெகா சங்கமம் ப்ரோமோ:

தமிழ் சின்னத்திரை சீரியல்களில் விறுவிறுப்பை அதிகரிக்க, இரண்டு சீரியல்களை ஒன்றிணைத்து மெகா சங்கமம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதன் படி “நம்ம வீட்டு பொண்ணு” மற்றும் “தென்றல் வந்து என்னை தொட” சீரியல் மெகா சங்கமம் சீரியலில் பல்வேறு திருப்பங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. மீனாட்சிக்கு திருமண ஏற்பாடு செய்ய வெற்றி அதை தடுக்க பல ஏற்பாடுகள் செய்கின்றனர். ஆனால் அதில் அனைவரும் எதிர்பார்க்காத திருப்பம் ஒன்று நடந்துள்ளது.

சரஸ்வதியை மருமகளாக ஏற்க மறுக்கும் கோதை? பதிலை கேட்டு ஷாக்கான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அண்ணிகள்!

அது குறித்த புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் மணப்பெண் மீனாட்சியின் ரூமிற்கு வெற்றியின் கூட்டாளிகள் வருகின்றனர். அப்போது அங்கே பெண் அறையில் ஒருவர் தூங்கி கொண்டிருக்க முகத்தை பார்க்காத அவர்கள் மீனாக்ஷி என நினைத்து வாழை இலைக்குள் வைத்து தூக்கி செல்கின்றனர். வெற்றி வெளியே காத்துக் கொண்டிருக்க, காரில் ஏற்றிக் கொண்டு வருகின்றனர். அப்போது வெற்றி கடத்த சொன்னவருக்கு போன் செய்கிறார்.

பிரியங்காவுடன் சண்டையிடும் தாமரை, தலைவர் போட்டி எதிரொலி – “பிக்பாஸ்” ப்ரோமோ ரிலீஸ்!

மீனாட்சியை யாருக்கும் தெரியாமல் கடத்தி விட்டதாக சொல்கிறார். இதை தான் உன்னிடம் எதிர்பார்த்தேன் என அவர் சொல்ல ,அந்த பார்ட்டிக்கு தகவல் கொடுத்துவிடு என வெற்றியிடம் சொல்கிறார். எல்லாத்தையும் நல்லபடியாக முடித்துவிட்டு போன் செய்வதாக வெற்றி சொல்ல, அவர்களது இடத்திற்கு கொண்டு வருகின்றனர். மூச்சு அடைச்சு சாக போகிறார் என சொல்லி முகத்தை திறக்க சொல்ல அங்கே வெற்றியின் மனைவி இருக்கிறார். அதை பார்த்து வெற்றி அதிர்ச்சி அடைகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!