Maggi நூடுல்ஸ் ஆரோக்கியமான உணவு இல்லை – தயாரிப்பு நிறுவனம் ஒப்புதல்!!

0
Maggi நூடுல்ஸ் ஆரோக்கியமான உணவு இல்லை - தயாரிப்பு நிறுவனம் ஒப்புதல்!!
Maggi நூடுல்ஸ் ஆரோக்கியமான உணவு இல்லை - தயாரிப்பு நிறுவனம் ஒப்புதல்!!
Maggi நூடுல்ஸ் ஆரோக்கியமான உணவு இல்லை – தயாரிப்பு நிறுவனம் ஒப்புதல்!!

முன்னணி உணவு பொருட்களின் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லேயின் (Nestle) 60 சதவீத உணவு பொருட்கள் ஆரோக்கியமானது அல்ல என்றும், அதை சீரமைக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெஸ்லே உணவு பொருட்கள்:

மக்கள் அனைவரும் பணி நிமித்தமாகவோ அல்லது வேறு சில தனிப்பட்ட காரியங்களுக்காகவோ வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில், துரித உணவுகளை வெகுவாக எடுத்துக்கொள்ள துவங்கியுள்ளனர். இந்த துரித உணவுகள் மூலம் உடல்நலம் பாதிக்கப்படும் என்பதை அனைவரும் அறிந்திருந்தாலும், அதிலிருந்து மீள்வதற்கு பலரால் முடிவதில்லை. அந்த வகையில் துரித உணவுகளுக்கு முன்னோடியான, நாம் அனைவரும் அறிந்துள்ள Maggi நூடுல்ஸ் ஒரு ஆரோக்கியமான உணவு இல்லை என அதன் தயாரிப்பு நிறுவனமே தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதாவது Maggi நூடுல்ஸ் என்ற உணவுப்பொருள் புகழ்பெற்ற நெஸ்லே (Nestle) நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. இந்த நூடுல்ஸ் இந்திய சந்தையில் மிக அதிகமாக விற்பனை செய்யப்படும் பொருட்களுள் ஒன்றாகும். சிறிய குழந்தைகள் துவங்கி பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உட்கொள்ளும் இந்த Maggi நூடுல்ஸானது ஆரோக்கியமானது இல்லை என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நெஸ்லே தயாரிப்பில் வெளிவரும் உணவுப் பொருட்கள், குளிர் பானங்கள் ஆகியவை ஆரோக்கியமற்றது என அந்த தயாரிப்பு நிறுவனமே தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக மது விற்பனை – போலீசார் விசாரணை!!

அந்த வகையில் நூடுல்ஸ் போன்ற உணவு பொருட்களின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் சுவை ஆரோக்கியம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நெஸ்லேயின் தரம் குறித்து பைனான்சியல் டைம்ஸ் என்ற பத்திரிகையில் வெளியான செய்தியில், நெஸ்லேவின் உணவு பொருட்கள் மற்றும் பானங்கள் தயாரிப்பில், 37 சதவீதம் பொருட்கள் 3.5 மதிப்பீட்டை கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கத்தில் இருந்து விரைவில் மீளும் தமிழகம் – அமைச்சர் நம்பிக்கை!

உணவுப்பொருட்களின் தரம் குறித்து 1 முதல் 5 வரையுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில், ஆஸ்திரேலியாவின் ஹெல்த் ஸ்டார் ரேட்டிங் சிஸ்டம் நெஸ்லே நிறுவனத்துக்கு 3.5 மதிப்பெண்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நெஸ்லே நிறுவனத்தின் 60 சதவீத உணவு பொருட்கள் ஆரோக்கியமற்றவை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை சீரமைக்க அந்நிறுவனம் ஆலோசித்து வருகிறது. தவிர மக்களின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றை கவனத்தில் கொண்டு நல்ல உணவு பொருட்கள் வழங்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!