மதுரை TVS பள்ளியில் LKG மாணவர் சேர்க்கை இன்று முதல் துவக்கம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
மதுரை TVS பள்ளியில் LKG மாணவர் சேர்க்கை இன்று முதல் துவக்கம் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
மதுரை TVS பள்ளியில் LKG மாணவர் சேர்க்கை இன்று முதல் துவக்கம் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
மதுரை TVS பள்ளியில் LKG மாணவர் சேர்க்கை இன்று முதல் துவக்கம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிரபலமான TVS பள்ளியில் தற்போது LKG வகுப்புகளுக்கான புதிய மாணவர் சேர்க்கை துவங்கி இருக்கிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

மாணவர் சேர்க்கை

தமிழகம் முழுவதும் கொரோனா 3ம் பேரலைத்தொற்று ஓய்ந்திருக்கும் சூழலில் சில வார விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உட்பட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திலும் 1 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் துவங்கி வழக்கம் போல செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் வரவிருக்கும் 2022-23ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – வரி விலக்கு சலுகை உயர்வு! பட்ஜெட் அறிவிப்புகள்!

அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளி நிறுவனமான TVS, LKG வகுப்புகளுக்கான புதிய மாணவர் சேர்க்கையை தற்போது துவங்கி இருக்கிறது. இது தொடர்பாக TVS கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வரும் 2022-23ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது துவங்குகிறது. அந்த வகையில் 01.08.2018 முதல் 31.07.2019 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட குழந்தைகள் இந்த மாணவர் சேர்க்கைக்கு தகுதி உடையவர்கள் ஆவர்.

மேலும் புதிய கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 04.02.2022 காலை 9 மணி முதல் 08.02.2022 மாலை 5 மணி வரையிலும் www.thetvsschool.org என்ற இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பங்களை செலுத்தலாம்’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனுடன் விண்ணப்பங்களை செலுத்தும் போது சில முக்கிய ஆவணங்களை பதிவேற்ற வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி – இந்திய அணிக்கு அறிவுரை வழங்கிய விராட் கோஹ்லி! வைரலாகும் புகைப்படம்!

அதன் படி, மாணவர்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றுடன் அந்த மாணவர்களின் பெற்றோர்கள் TVS பள்ளியில் படித்திருந்தால் அதற்குரிய TC அல்லது மதிப்பெண் சான்றிதழை விண்ணப்பத்துடன் பதிவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த பைல்கள் அனைத்தும் jpg, gif, png அல்லது bmp பார்மேட்டில் 500 KBக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!