மதுரையில் நாளை மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
மதுரையில் நாளை மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
மதுரையில் நாளை மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

மதுரை மாவட்டத்திலுள்ள ஆரப்பாளையம் பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ஆரப்பாளையம் உள்ளிட்ட சில பகுதிகளில் காலை 10 மணி முதல் 2 மணி வரை மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை:

தமிழகத்தில் அவ்வப்போது மின்கம்பங்களில் பழுது, மின் இணைப்பு துண்டிப்பு, மின் கசிவு ஆகியவை ஏற்படுகிறது. இதனால் எதிர்பாராத விதமாக பல இடங்களில் விபத்துகள் ஏற்பட காரணமாகி விடுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் தான் அதிக அளவில் மின்தடை மற்றும் மின்கசிவு ஏற்பட்டு சில விபத்துகளுக்கு காரணமாக அமைகிறது. மேலும், மின்கம்பங்களில் ஏற்படும் பாதிப்பை சரிப்படுத்த தமிழக அரசு அவ்வப்போது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதாவது மாதந்தோறும் மின் தடை அறிவிக்கப்பட்டு மின் சாதனங்கள் அனைத்தும் பழுது பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் மின் தடை செய்யப்படுவதில்லை. மேலும் மின்தடை செய்யப்படும் பகுதிகள் முன்கூட்டியே மக்களுக்கு அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நாளை மதுரை மாவட்டத்திலுள்ள ஆரப்பாளையம் பகுதிகளிலுள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மதுரை மாவட்டத்திலுள்ள சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரப்பாளையம் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ள பகுதிகள் இதோ,

தமிழக மாணவிகளுக்கான ரூ.1000 உதவித்தொகை திட்டம் ‘இவர்களுக்கு’ பொருந்தாது – அரசு அறிவிப்பு!

வடக்கு வெளி வீதி, வடக்கு மாசி வீதி, (பிள்ளையார் கோவில் முதல் ராமாயணசாவடி வரை), மேல மாசி வீதி, (பிள்ளையார் கோவில் முதல் மீனாட்சி பேன் ஹவுஸ் வரை), சேணையர் காலனி, கீழஅண்ணா தோப்பு, ஒர்க் ஷாப் ரோடு, நாயக்கர் 4-வது தெரு, வடக்கு பெருமாள் மேஸ்திரி வீதி. காமராஜர் சாலை மெயின்ரோடு, பங்கஜம் காலனி 3-வது தெரு, சந்தைபேட்டை, நவரத்தினபுரம், ஏ.வி.டி.பந்தல் தெரு, சவுராஷ்டிரா ஆண்கள் பள்ளி சுற்றியுள்ள பகுதிகள், காதர்கான் பட்லர் சந்து, மாயாண்டி தெரு, வெங்கடபதி தெருக்கள் முழுவதும், பிஷர் ரோடு, சீனிவாசா பெருமாள் கோவில் தெருக்கள் முழுவதும், சுடலைமுத்து சந்து, பழைய இங்கிலீஷ் கிளப் சந்து, தொழில் வர்த்தக சங்க அலுவலகம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் நண்பகல் 2 மணி வரைக்கும் மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!