மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர் மீதான வழக்கு – உயர்நீதி மன்ற மதுரை கிளையின் முக்கிய உத்தரவு!

0
மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர் மீதான வழக்கு - உயர்நீதி மன்ற மதுரை கிளையின் முக்கிய உத்தரவு!
மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர் மீதான வழக்கு - உயர்நீதி மன்ற மதுரை கிளையின் முக்கிய உத்தரவு!
மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர் மீதான வழக்கு – உயர்நீதி மன்ற மதுரை கிளையின் முக்கிய உத்தரவு!

மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணியில் அமைந்துள்ள சூப்பர் சரவணா ஸ்டோர் நிறுவனம் மீது தொடரப்பட்ட வழக்கில் இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கானது பிப். 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு:

மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணியில் கடந்த 2022 டிசம்பர் 5ஆம் தேதி புதிதாக சரவணா ஸ்டோர்ஸ் திறக்கப்பட்டுள்ளது. இந்த கடைக்கு அனுமதி வழங்கியதில் விதிமீறல் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடையாமல் உள்ளது. இந்த நிலையில் கட்டிடம் திறக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

மதுரையின் முக்கிய பகுதியில் இந்த சரவணா ஸ்டோர் அமைந்துள்ளதால் அதிகமான மக்கள் வந்து செல்கிறார்கள். இத்தகைய சூழலில் வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்த சரியான இடம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். அதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக காவல்துறையில் 10% இட ஒதுக்கீடு – சட்டத்தை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

இன்று விசாரணைக்கு வந்த இந்த மனு மீதான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவன வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை பிப். 6ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!