மதுரையில் நாளை (ஜூன் 13) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!

0
மதுரையில் நாளை (ஜூன் 13) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்சார வாரியம் அறிவிப்பு!
மதுரையில் நாளை (ஜூன் 13) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்சார வாரியம் அறிவிப்பு!
மதுரையில் நாளை (ஜூன் 13) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!

மதுரை மாவட்டத்தில் துணை மின் நிலையத்தில் நாளை (13.06.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் மின்தடை ஏற்படும் பகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை:

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மின் பராமரிப்பு பணிகளின் போது சாலைகளில் மின் விநியோகத்திற்கு தடையாக உள்ள மர கிளைகள் வெட்டப்பட்டு மின் பாதை சரி செய்யப்படுகிறது. மேலும் மின் கம்பங்களில் பழுதடைந்த மின் கருவிகள் மாற்றப்படுகிறது. மின்கம்பங்களில் உள்ள மின் கம்பிகள், வயர்கள் மாற்றுதல், மின் இணைப்புகளை சரி பார்த்தல் உள்ளிட்ட முக்கிய பணிகள் நடைபெறுகிறது. மின் பராமரிப்பு பணியின் போது மின் ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும், மின் பயனர்கள் பாதுகாப்பிற்காகவும் பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – வலுக்கும் போராட்டம்!

மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை மதுரை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் ரட்டம்பத்திரி, கிரம்மர்புரம், மில் காலனி, மேலப்பொன்னகரம் 10 – – 12 தெரு, பெரியசாமி நகர், திருப்பதி நகர், சி.ஏ.எஸ். நகர், சொக்கு பிள்ளை நகர், அண்ணா நகர், அக்ரஹாரம், புரசரடி, ஜெ.பி.நகர், திருப்பரங்குன்றம் ரோடு, எம்.கே.எம்.நகர், எஸ்.கே.ஆர். நகர், முல்லை நகர், ராஜிவ் காந்தி நகர், பாம்பன் நகர், சந்தோஷ் நகர், தென்பரங்குன்றம், காசி தோட்டம், பெரியரத வீதி குடியிருப்பு.சமயநல்லுார் ராஜக்காபட்டி, மறவர்பட்டி ஆகிய பகுதிகளில் ஜூன் 13ம் தேதி மின் தடை செய்யப்படும்.

அதனை தொடந்து சத்திரவெள்ளாளபட்டி, வையம்பட்டி, ராமகவுண்டன்பட்டி, குட்லாடம்பட்டி, கச்சைகட்டி, சமத்துவபுரம், அங்கப்பன்கொட்டம்.வேப்படப்பு, பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், ஆமூர், இடையப்பட்டி, எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, மேலவளவு, பட்டூர், கேசம்பட்டி, அரிட்டாபட்டி, ஆலம்பட்டி, சேக்கிபட்டி, ஆ.வல்லாளப்பட்டி, திருவாதவூர், கட்டையம்பட்டி, கொட்டகுடி, சாணிபட்டி, புலிப்பட்டி ஆகிய பகுதிகளிலும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

Exams Daily Mobile App Download

அதே போல ஆட்டுக்குளம், வண்ணாம்பாறைபட்டி, அழகாபுரி, கணபதியாபுரம், கடச்சனேந்தல், காதக்கிணறு, ஜாங்கிட் நகர், சுந்தர்ராஜன்பட்டி, இரணியம், மீனாட்சி கார்டன், அழகர் கார்டன், பொய்கைகரைபட்டி, கள்ளக்குறிச்சி, குறிஞ்சிநகர், வலையபட்டி, நாயக்கன்பட்டி, கோபுர குன்று ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வலையங்குளம், எலியார்பத்தி, நெடு மதுரை, பாரபத்தி, சோளங்குருணி, நல்லூர், குசவன்குண்டு, மண்டேலா நகர், சின்ன உடைப்பு, வலையபட்டி, ஓ.ஆலங்குளம், கொம்பாடி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here