அஞ்சல் துறையில் ரூ.63,200/- ஊதியத்தில் வேலை ரெடி – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்!

0
அஞ்சல் துறையில் ரூ.63,200/- ஊதியத்தில் வேலை ரெடி - இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்!
அஞ்சல் துறையில் ரூ.63,200/- ஊதியத்தில் வேலை ரெடி - இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்!
அஞ்சல் துறையில் ரூ.63,200/- ஊதியத்தில் வேலை ரெடி – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்!

அஞ்சல் துறையில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில், மதுரை மாவட்ட தபால் நிலையத்தில் காலியாக உள்ள Skilled Artisans பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் (17.10.2022) மட்டுமே மீதம் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

அஞ்சல் துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:

Skilled Artisans கீழ்வரும் M.V.Mechanic (Skilled), M.V.Electrician, Painter (Skilled), Welder, Carpenter ஆகிய பணிகளுக்கு என 07 பணியிடங்கள் மதுரை மாவட்ட தபால் நிலையத்தில் காலியாக உள்ளது.

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி / கல்வி நிறுவனங்களில் 8ம் வகுப்பு அல்லது பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

M.V.Mechanic (Skilled) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் HMV License வைத்திருப்பது அவசியமானது ஆகும்.

01.07.2022 அன்றைய தேதியின் படி, இந்த அஞ்சல் துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் அரசு ஊழியராக இருப்பின் 40 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் OBC-பிரிவிற்கு 03 ஆண்டுகள் வயது தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

Exams Daily Mobile App Download

தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு Level 2 என்ற ஊதிய அளவின் படி, ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

Competitive Trade Test மூலம் இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

அஞ்சல் துறை விண்ணப்பிக்கும் விதம்:

இந்த அஞ்சல் துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 17.10.2022 அன்றுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும். இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

Download Notification & Application Link 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!