விஜய் டிவி மதுரை முத்துவுக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகளா? வைரலாகும் குடும்ப புகைப்படம்!

0
விஜய் டிவி மதுரை முத்துவுக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகளா? வைரலாகும் குடும்ப புகைப்படம்!
விஜய் டிவி மதுரை முத்துவுக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகளா? வைரலாகும் குடும்ப புகைப்படம்!
விஜய் டிவி மதுரை முத்துவுக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகளா? வைரலாகும் குடும்ப புகைப்படம்!

நகைச்சுவை நிகழ்ச்சிகளின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் மதுரை முத்து, தனது 2 குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று வலைதளங்களில் வெளியாகி பார்வையாளர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

மதுரை முத்து

விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் மூலம் மக்களை மகிழ்வித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் மதுரை முத்து. மற்ற நகைச்சுவையாளர்களை போல் அல்லாது தனக்கே உரிய தனி பாணியில் நகைச்சுவை செய்து வரும் இவர் ஒரு பட்டிமன்ற பேச்சாளரும் கூட. நகைச்சுவை ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் முன்னோடியான அசத்தப்போவது யாரு என்ற ஷோ மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமான இவர் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கும் அளவுக்கு தற்போது உயர்ந்திருக்கிறார்.

கண்ணனை ஏற்றுக் கொள்ள மறுக்கும் மூர்த்தி, ஐஸ்வர்யாவிற்கு உதவி செய்யும் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

இப்போது விஜய் டிவியில் நடைபெற்று முடிந்த ‘குக் வித் கோமாளி’ சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும், ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ என்ற நிகழ்ச்சியில் நடுவராகவும் கலந்து கொண்டிருந்தார் மதுரை முத்து. இந்த நிகழ்ச்சிகளில் அவர் அடிக்கும் மொக்கை ஜோக்குகள் மக்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்புகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மதுரையை சொந்த ஊராக கொண்ட முத்து, தனது குடும்பத்தாருடன் மதுரையிலேயே வசித்து வருகிறார்.

மாரடைப்பு காரணமாக முன்னணி நடன இயக்குனர் சிவசங்கர் திடீர் மரணம் – பிரபலங்கள் இரங்கல்!

இப்படி இருக்க மதுரை முத்து தனது 2 மகள்கள் மற்றும் மகனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படம் ஒன்று வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் மதுரை முத்துவுக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகள் இருக்கிறார்களா என்று ஆச்சரியத்துடன் அந்த புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படம் தற்போது பார்வையாளர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!