மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இனிதே நிறைவு பெற்றது – பக்த கோடிகள் மகிழ்ச்சி!

0
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இனிதே நிறைவு பெற்றது - பக்த கோடிகள் மகிழ்ச்சி!
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இனிதே நிறைவு பெற்றது - பக்த கோடிகள் மகிழ்ச்சி!
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இனிதே நிறைவு பெற்றது – பக்த கோடிகள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயமான மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் இன்று கோலாகலமாக நடைபெற்றது. அதனால் உலகில் உள்ள அணைத்து பக்தகோடிகளும் ஆர்வமாக பார்த்து மகிழ்ந்தனர். மேலும் இந்த விழா இரு வருடம் கழித்து நடைபெறுவதால் மக்கள் மிகவும் ஆரவாரமாக இருந்து வருகின்றனர்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்:

தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்த காரணத்தால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். மேலும் மாநிலத்தில் உள்ள கோவில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு அங்கு நடைபெறும் திருவிழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்குகள் முடிந்த நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி சித்திரை திருவிழா நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவானது கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்தது. அதனால் மதுரை மக்கள் மட்டுமில்லாமல் உலக நாடுகளில் இருக்கும் தமிழ் மக்கள் அனைவரும் இரு வருடம் கழித்து நடைபெற உள்ள இந்த திருவிழாவை காண ஆவலுடன் காத்து இருந்தனர்.

அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மே 2 முதல் ஜூன் 13 வரை கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

மேலும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப் 14), தமிழ் புத்தாண்டு தினத்தன்று நடைபெற்றது. திருக்கல்யாண உற்சவத்தை காண பக்தர்களுக்கு 200, 500 ரூபாய் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 200 ரூபாய் கட்டணத்தில், அதிகபட்சம் 3 பேருக்கும், 500 கட்டணத்தில் அதிகபட்சம் 2 பேரும் அனுமதிக்கப்பட இருப்பதாக தெரிவித்து உள்ளனர். மேலும், 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டண சீட்டு பெற வேண்டும். குறிப்பாக, 500 ரூபாய் கட்டண சீட்டு 2,500 பேருக்கும், 200 ரூபாய் கட்டண சீட்டு 3,200 பேருக்கும் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளன. மேலும் ஒரே நபருக்கு இரண்டு கட்டண சீட்டுகளை விண்ணப்பிக்க முடியாது என்றும் கூறி இருந்தனர்.

மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 7வது ஊதிய குழுவின் பரிந்துரை!

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று காலை 10:30 மணிக்கு மேல் 10:59 மணிக்குள் புதிய திருக்கல்யாண மண்டபத்தில் ஆச்சாரியர்கள் மூலம் வேத மந்திரங்கள் ஒலிக்க சிறப்பாக தெய்வத்தின் திருமணம் நடைபெற்றது. மேலும் இரு ஆண்டுகள் கழித்து நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்தனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here