மதுரை மக்களுக்கு ஹாப்பி நியூஸ் – மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் குறித்த சூப்பர் அறிவிப்பு!

0
மதுரை மக்களுக்கு ஹாப்பி நியூஸ் - மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் குறித்த சூப்பர் அறிவிப்பு!
மதுரை மக்களுக்கு ஹாப்பி நியூஸ் - மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் குறித்த சூப்பர் அறிவிப்பு!
மதுரை மக்களுக்கு ஹாப்பி நியூஸ் – மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் குறித்த சூப்பர் அறிவிப்பு!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் 2 வருடங்களுக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் திருக்கல்யாண உற்சவ விழாவில் தரிசிக்க விரும்பும் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும், 6 முதல் 8 எல்இடி திரைகள் மூலம் மீனாட்சி திருக்கல்யாணத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

சூப்பர் அறிவிப்பு:

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நடந்தாலும், பிரம்மோற்சவ விழாவாக சித்திரை திருவிழா விளங்குகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்குவதும் தான். இருப்பினும் கடந்த கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோவில் உள் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. அப்போது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், திருத்தேர், கள்ளழகர் எதிர் சேவை உள்ளிட்ட நிகழ்வுகள் இணையத்தில் மக்கள் காணும்படி நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டத்தை குறைக்க கோரிக்கை!

இது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. மேலும் வரும் 14ஆம் தேதி திருக்கல்யாணமும், 15ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறும். 16ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். அழகர் மலையில் இருந்து வைகையில் இறங்கி வரும் கள்ளழகரை வரவேற்க எதிர்சேவை தொடங்கி அவர் வைகையில் இறங்கி மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் கொடுத்து விட்டு திரும்பும் வரைக்குமே பக்தர்கள் கூட்டம் மதுரையில் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருவிழாவை காண பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் மதுரைக்கு வருவார்கள்.

விழாவில் சிகர நிகழ்ச்சியாக தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. அன்றைய தினம் காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வுகள் மேற்கு, தெற்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும். திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகளும், தெற்கு கோபுரம் வழியாக பக்தர்கள் கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி என்ற முறையிலும் சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்நிலையில் மீனாட்சி திருக்கல்யாணத்தை காண பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here