RBI வெளியிட்ட நகைக்கடனுக்கான புதிய நெறிமுறைகள்.. மதுரை உயர்நீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்.. அதிர்ச்சியில் அதிகாரிகள்..!!

0
RBI ????????? ?????????????? ????? ???????????.. ????? ?????????????? ??????? ????????.. ????????????? ??????????..!!
RBI வெளியிட்ட நகைக்கடனுக்கான புதிய நெறிமுறைகள்.. மதுரை உயர்நீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்.. அதிர்ச்சியில் அதிகாரிகள்..!!

RBI வெளியிட்ட நகைக்கடனுக்கான புதிய நெறிமுறைகள்.. மதுரை உயர்நீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்.. அதிர்ச்சியில் அதிகாரிகள்..!!

முன்னதாக வங்கிகளில் நகைகளை அடகு வைப்பவர்கள், ஆண்டுத்தோறும், வட்டியை மட்டும் செலுத்தி, மறு அடகு வைத்து கொள்ளலாம் என்ற விதி இருந்தது. தற்போது அதை மாற்றி, அசலுடன் வட்டியும் சேர்த்து செலுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டு நெறிமுறையை அமல்படுத்தியது. இதை எதிர்த்து, மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த பிச்சை ராஜா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், “RBI சமீபத்தில் வெளியிட்ட புதிய விதியில், ஒரு தனிநபர் குறிப்பிட்ட வங்கியில் 5 முறை மட்டுமே தங்க நகை கடன் பெற முடியும் என்பது ஏழைகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், நகைக்கடன் வழங்குவதில் வங்கிகள் நகரம் மற்றும் கிராமங்கள் இடையே பாரபட்சம் நிலவுவதாக குற்றம்சாட்டிய அவர் மத்திய நிதித்துறை அமைச்சகம் இதில் தலையிட்டு RBI யின் புதிய வழிகாட்டுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி அவர்கள் தலைமையில் விசாரணைக்கு வந்த போது, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை திரும்ப பெறக் கோரிய வழக்கில், மத்திய நிதித்துறை செயலாளர் மற்றும் RBI பொதுமேலாளர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!